லைஃப் ஸ்டைல்

குளிர் காலத்தில் தலைக்கு குளித்தால் பிரச்சனையா ????????

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குளிர் காலம் வந்தாலே பல பயங்கள், சந்தேகங்கள் நம்மைப் பிடித்துக்கொள்கின்றன. சிலருக்கு உடல் சூடு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதாவது அவர்கள் உட்கார்ந்து எழுந்த இடத்தில் சூடாக இருப்பதாக மற்றவர்கள் உணருவார்கள்.

அப்படிப்பட்ட உடல் கொண்டவர்கள், குளிர்ச்சியான காற்று, மழை, பனி விழும் சமயத்தில் வீட்டுக்கு வெளியே இருந்தால் மூக்கடைப்பு, தும்மல், நீர்கோத்து தலைவலி போன்றவை வரும். இவற்றைப் பீனிச பாதிப்பு என்பர். முன்னால் குனிந்தால் நீர் ஓடுவதுபோல் பாரம் இருந்தால், சைனஸ் இருக்கக்கூடும்.

காது சீழ், டான்சிலிடிஸ் போன்ற எல்லாமே உடலின் மேல் பக்க உறுப்புகளைச் சார்ந்த சுவாச பிரச்சனைகள் எனப்படுகின்றன. இந்தப் பாதிப்பு உள்ளவர்கள், தலைக்குக் குளிக்கலாமா????? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கிறது. பலர் பயத்தில் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதேயில்லை. கண்டிப்பாகத் தினமும் தலைக்குக் குளிக்கவேண்டும்.

ALSO READ  ஆலப்புழாவில் வைரலாகும் அதிசய கோழி!

உடம்பு வலி இருக்கிறது, காய்ச்சல் இருக்கிறது என்றால் மட்டும் தலைக்குத் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்கலாம். பல ஆண்டுகள் தலைக்குக் குளித்து பழக்கமில்லையென்றால் உடனடியாக குளிக்கவேண்டாம். சுக்கு தைலம், நொச்சி தைலம், அரக்கு தைலம் போன்ற சித்த மருத்துவம் சார்ந்த தைலங்களைத் தேய்த்து அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வளமான கூந்தலை பெற மரச்சீப்பு பயன்படுத்துங்கள் :

Shobika

மணப்பெண் கேட்ட ‘100 பரிசுகள்’ : வாங்கி கொடுத்து அசத்திய மாப்பிள்ளை

Admin

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin