லைஃப் ஸ்டைல்

சருமத்தை பளிச்சென்று வைக்க சில எளிய குறிப்புகள் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நமது இயற்கையான ஒளிரும் நிறத்தை நாம் தக்கவைத்து கொள்வது மிக முக்கியமாகிறது.நமது புறத்தோற்றம் என்பது சருமத்தை பொறுத்தே அமைகிறது. அதனால்தான் நாம் நமது சருமத்தை அழகாக பேணி காக்க எண்ணுகிறோம். நமக்கு இருக்கும் வேலைகளுக்கு நடுவே அதை செய்வது கடினமான விஷயமாக உள்ளது.இதற்கு சில எளிய தீர்வுகள் உள்ளன.

​நீரேற்றமாக இருங்கள் :

தோலை ஒளிர செய்வதற்காக நீங்கள் செய்ய கூடிய எளிய வழி என்றால் அது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதுதான். ஒவ்வொரு நாளும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களும் வெளியேற்றப்பட்டு உங்கள் செல்கள் நீரேற்றமடைகின்றன. இது தோலின் நிறம், மிருதுவான தன்மை ஆகியவை மேம்பட உதவுகிறது.

ALSO READ  ரூ. 2க்கு கற்றாழை நாப்கின் : திருச்சி ஜோசப் கல்லூரி மாணவர்கள் கண்டுபிடிப்பு!

​உடற்பயிற்சி செய்யுங்கள் :

உங்கள் சருமம் இலகுவாக இருக்க நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் வேலை செய்யும் போது உங்கள் சருமத்தில் உள்ள சிறிய தமனிகள் திறக்கும். இதனால் அதிக இரத்தம் சருமத்தின் மேற்பரப்பை அடையும். இதனால் உங்கள் சருமத்திற்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் சுற்றுசூழல் மாசுப்பாட்டால் தோலில் ஏற்படும் சேதத்தையும் இது சரி செய்கிறது.

ALSO READ  Hair tattoo பற்றி தெரியுமா?

​தோல் பராமரிப்பு பணிகள் :

உங்கள் தோலில் நிறம் குறைந்து வருவது குறித்து நீங்கள் கவலைப்பட்டால் அதற்கு தீர்வாக நீங்கள் சரியான தோல் பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்தலாம்.எஸ்.பி.எஃப் அடங்கிய கிரீம்களை பயன்படுத்தலாம். இவை உங்கள் சருமத்தை பாதுக்காக்கும்.பழுப்பு நிறமாக இருப்பவர்களுக்கு UV கதிர்வீச்சு க்ரீம்கள் கிடைக்கின்றன. எனவே இந்த முறைகளை பின்பற்றி உங்களது சருமத்தை ஒளிரும் அழகான சருமமாக மாற்றலாம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நம்ம சென்னைக்கு வந்தாச்சு ரிவோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் பைக்..!!!

naveen santhakumar

சில மனிதர்கள் – சில நினைவுகள் பகுதி -11 (மக்கள் மருத்துவர்)

News Editor

பூசணியில் உள்ள மருத்துவ குணங்கள்!!!….

Admin