தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 73,31,302 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 73,30,302 நபர்கள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 34,41,360 ஆண்களும், 38,89,715 பெண்கள், 227 மூன்றாம் பாலினத்தவர் பதிவு செய்துள்ளனர். அதேபோல், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 26,86,932 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12,97,693 நபர்களும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 11,245 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1,07,871 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.