லைஃப் ஸ்டைல்

அட இப்படியொரு திருமணமா?… அசத்தும் தமிழக ஜோடி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவிலேயே முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம் சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ், மணமகள் ஜனகநந்தினி மெட்டாவர்ஸ் மூலமாக மெய்நிகர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக்காட்ட உள்ளனர். தினேஷ் ஒரு தொழில்நுட்ப வல்லுநர், கிரிப்டோகரன்சி முதலீடு மற்றும் மைனிங் செய்து வருகிறார். மணமகள் ஜனகநந்தினி டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ஹாரிபாட்டர் கதையில் வரும் Hogwarts School of Witchcraft and Wizardry என்ற தீம் மூலமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான மெய்நிகர் வடிவமைப்பு பணிகள் அனைத்தையும், சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று செய்து கொடுக்க உள்ளது.

ALSO READ  சிறுத்தைக்குட்டிகள் கூட வாடகைத்தாய் மூலம் பிறக்குமா?

திருமண பத்திரிக்கையோடு ஒரு வெப்சைட் லிங்க் மற்றும் பாஸ்வேர்ட் கொடுக்கப்படும், அதனை பயன்படுத்தி லாக் இன் செய்து மெய்நிகர் திருமண வரவேற்பில் பங்கேற்கலாம். மணமகன், மணமகள், பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது அவதார் தயாராகிவிட்டது, பிறர் தங்களது விரும்பும் அவதாரை தேர்வு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்று மகிழலாம். இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி இப்படியொரு திருமணத்தை நடத்த உள்ளதால் சோசியல் மீடியா முழுவதுமே இதுபற்றிய பேச்சுக்கள் அதிக அளவில் காணப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முளைக்கட்டிய பயிரால் கிடைக்கும் நன்மைகள்!!… 

naveen santhakumar

கழுத்தின் அழகை மேம்படுத்தும் பயிற்சிகள் :

Shobika

நகத்தை வைத்து ஒருவரின் குணத்தை கண்டறியலாம்….எப்படினு தெரிஞ்சிக்கணுமா..???அப்போ இதை படிங்க….

Shobika