லைஃப் ஸ்டைல்

முகப்பொலிவிற்கு இதையெல்லாம் பாலோவ் பண்ணுங்க…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முகத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பேஷியல் இந்த காலத்தில் தேவை. இதில் செலவில்லா சரும பேஷியலை பப்பாளி பழம் தரும். பப்பாளி பழக்கூழை 10-15 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்து, பிறகு இளஞ்சூடான வெந்நீரில் முகத்தை கழுவினால் போதும். தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை பளிச்சிட வைக்கும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் பப்பாளித்தோலின் அடிப்பகுதியை பூசிவர, சருமம் நீரோட்டம் பெற்று பொலிவடையும்.

How To Make Your Own Cucumber Face Mask: The 7 Best Recipes

வெள்ளரிக்காய்களை நறுக்கிக்கண்களில் வைத்துக்கட்டினால் கண்கள் பிரகாசம் அடைவதோடு, கண் எரிச்சலும் மட்டுப்படும். கணினி முன்னால் அதிக நேரம் செலவிடுபவர்கள், கண்களின் மேல் வெள்ளரியை வைத்துக்கொள்வது சிறந்தது.

22 Easy Homemade Cucumber Face Mask Recipes To Nourish Skin

அதே போல வெள்ளரிக்காயை அரைத்து பூசினால் தோலில் உள்ள இணைப்பு திசுக்கள் ஊட்டம் பெறுவதோடு, சூரிய வெப்பத்தால் உண்டாகும் எரிச்சலும் குறையும். கண்களின் கீழ் உள்ள கருவளையம் மறைய வெள்ளரிக்காய் வளையத்தை வைப்பதோடு, விளக்கெண்ணெயும் தடவலாம். நல்ல தூக்கமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதும் கருவளையத்தை போக்குவதற்கான சிறந்த ஆயுதங்கள். முகத்தில் கற்றாழை கூழைத் தடவிவந்தால் பருக்கள் வராமல் தடுக்கலாம். இதே போல் கற்றாழை, தோலில் உண்டாகும் சுருக்கங்களை தடுக்கிறது.

ALSO READ  கருவளையங்களை காணாமல் ஆக்ககூடிய எளிய வழிமுறைகள் :

முகச்சவரம் செய்து முடித்த பிறகு `தேங்காய் எண்ணெய் – கற்றாழை கலவையை’ தடவுவதால் சவரம் செய்யும்போது உண்டான சிறு சிராய்ப்புகள் விரைவாக குணமடையும். முகமும் பிரகாசமடையும். எண்ணெய்ப்பசை சருமத்தை கொண்டவர்களுக்கு கற்றாழை முகப்பூச்சு சிறந்த தேர்வு. இன்றும் கிராமத்து சிறுவர்களின் இயற்கை ஒப்பனை பொருள் குளுகுளு கற்றாழைதான்.

Skin Whitening Tomato Facial | Get Fair, Glowing, Spotless Skin Permanently  - YouTube

முகத்தில் உள்ள சுருக்கங்களை குறைக்கவும் தடுக்கவும் தக்காளி பேஷியல் உதவுகிறது. இதில் உள்ள சத்துகள் தோலுக்கு ஊட்டம் தருகிறது. வாரத்துக்கு 2 முறை தக்காளியை மசித்து தயிரோடு சேர்த்து தடவிவந்தால், முகப்பருக்கள் நீங்கி முகப்பொலிவு உண்டாகும். முகத்தை எப்போதும் பொலிவோடு வைத்துக்கொள்ள வெளிப்பூச்சோடு சேர்த்து பச்சை காய்கறிகள், கொய்யா, நெல்லி, மாதுளை, அத்தி, சாத்துக்குடி, திராட்சை போன்ற பழவகைகளை உட்கொள்ள வேண்டும்.

ALSO READ  ஆக்சிஜன் பற்றாக்குறையாக இருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :

மன அழுத்தம் முகப்பொலிவை பெருமளவு பாதிக்கும். எனவே மனதை உற்சாகமாக வைத்துக்கொள்வதும், அழகை மேம்படுத்துவதற்கான முக்கிய உத்தி ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ப்பப்பை கோளாறை சரிசெய்யும் இயற்கை மருத்துவம்

Admin

சைவப் பிரியர்களுக்கு ‘கே.எஃப்.சி’-யின் குட் நியூஸ்!

naveen santhakumar

பன்னீர் ரோஜாவின் பலன் தரும் பயன்கள் :

Shobika