மருத்துவம் லைஃப் ஸ்டைல்

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டுமா? இதை செய்யுங்கள்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஞாபக சக்தி எவ்வளவு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான். ஞாபக சக்தி என்ற ஒன்று இல்லாமல் போனால் , இந்த உலகில் நாம் யார் என்பதே தெரியாது போய் விடும்.

மறதி சில நேரங்களில் நமக்கு பெரும் உதவி செய்தாலும் , முக்கியமான நேரத்தில் முக்கியமான விஷயங்களை மறந்துவிட்டு , “ஐயையோ ! மறந்துட்டேனே!” என்று புலம்புபவர்கள் இன்று அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறோம்.

ஆனால் , நம் ஞாபக சக்தியை சிறு முயற்சிகள் மூலம் பெருக்க முடியும் என்றால், அதை செய்யாமல் இருப்பது நம் தவறுதானே?

சரி! வாருங்கள் இந்த ஞாபக சக்தியை அதிகப்படுத்த சில பயனுள்ள வழிகளைப் பார்ப்போம்.

  1. புதிய விசயங்களைக் கற்றுக்கொள்ளுதல்

நம் உடல் தசைகள் எவ்வாறு உடற்பயிற்சி செய்ய செய்ய பலம் பெறுகிறதோ அது போல் தான் நம் மூளையும். ஏற்கனவே செய்ய முடிந்த, பழகிய விஷயங்களையே செய்துக் கொண்டு இருப்பதைத் தாண்டி புதுமையான விஷயங்களைச் செய்யும் பொழுது மூளை பலம் அடைகிறது.

ஓர் புதிய மொழியைக் கற்றுக் கொள்வதும் கூட மூளைக்குச் சிறந்த பயிற்சியாய் அமையும்.

  1. பிரித்தோ அல்லது சேர்த்தோ கற்றுக்கொள்ளுதல்

ஏதாவது புதிதாக கற்றுக் கொள்ளும் பொழுது , அதை பிரித்தோ அல்லது சேர்த்தோ அல்லது முன்பே தெரிந்த ஒன்றோடு தொடர்புப்படுத்தியோ மிக எளிதாக கற்றுக் கொள்ளலாம்

ALSO READ  கிரீன் டீ யால் உங்களுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுகிறதா?

3.திரும்ப திரும்ப பயிற்சி செய்தல்

ஓர் விஷயத்தை ஒரு முறை படித்துவிட்டோ, பார்த்துவிட்டோ, கேட்டுவிட்டோ, வேறு எந்த முயற்சியும் எடுக்காது , அவை அப்படியே மனதில் பதிந்துவிட வேண்டும் என்று பேராசைக் கொள்ளாது, மீண்டும் மீண்டும் நினைவுக் கூறி பழக வேண்டும்.

4.உடனே கூகிள் செய்வதை நிறுத்துங்கள்

இன்றைய காலத்தில், நாம் எதையும் யோசித்துப் பார்ப்பதே கிடையாது. ஏதாவது தெரியவில்லை என்றால் , உடனே எளிதாக கூகிளிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம் என்றிருக்கும் பொழுது, நாம் ஏன் நம் மூளையை வேலை வாங்கப் போகிறோம்? ஆனால் , இப்படி செய்து தான் , நம் மூளையை இன்று ஓர் மூலையில் சிறிது சிறிதாக தூங்க வைத்திருக்கிறோம். அடுத்த முறை ஏதாவது வேண்டும் எனும்பொழுது, அது ஏற்கனவே தெரிந்த ஒன்றாய் இருப்பின், சோம்பேறித் தனம் பார்க்காமல், மொபைலை நாடும் முன் ஒரு நிமிடமாவது மூளையை தூசு தட்டி எழுப்பி வேலை வாங்குங்கள். கூகிளைப் புதிதான விஷயங்களைத் தெரிந்துக்கொள்ளப் பயன்படுத்துங்கள்.

ALSO READ  பெண்கள் விரும்பி அணியும் வகை வகையான வளையல்கள் :

5.சரியான நேரத்தில் தூக்கம் அவசியம்

தினசரி சரியான நேரத்தில் தூங்குங்கள். அதிகாலை எழுந்துக்கொள்ள பழகுங்கள்.
ஞாபக சக்திக்கு சரியான நேரத்தில் சரியான அளவு தூக்கம் மிகவும் முக்கியம்.

6.உணவுப் பழக்கம்

இயற்கையான உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிடுங்கள். முடிந்த அளவு சர்க்கரை சேர்த்த உணவுகள், பொறித்த, வறுத்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். உங்கள் மூளை எந்த அளவிற்கு வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அந்த அளவு அதற்கு தேவையான சத்தான உணவுகளைக் கொடுப்பதும் முக்கியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இது போல் ஞாபக சக்தியைப் பெருக்கிக் கொள்ள நிறைய வழிகள் உள்ளது. அனைத்திற்கும் நம் முயற்சி வேண்டும் என்பது தான் உண்மை. எனவே, முயற்சியால் பயிற்சி செய்வோம்!! ஞாபக சக்தியை அதிகரிப்போம்.

  • Dr.வைஷ்ணவி.க

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடலில் ஏற்படும் உபாதைகள் :

Shobika

என்னது??….உப்புல இத்தனை வகையா???

naveen santhakumar

நைட் இந்த டைம் சாப்பிட்டா உடல் எடை குறையுமாம் தெரியுமா?

Admin