லைஃப் ஸ்டைல்

இந்தியாவில் அறிமுகமானது Vivo V 19- இதன் குறித்த விவரங்கள் மற்றும் விலை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

Vivo V 19 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போனில், ஸ்னாப்டிராகன் 712 (Snapdragon 712 SoC) சிப்செட் உள்ளது. இப்போதைக்கு, பச்சை மண்டலம் மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் விற்பனை தொடங்கும்.

ஹைலைட்ஸ்:-

இந்த போன் 48 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

இந்த போனில் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளது.

டிஸ்ப்ளேவுக்கு கீழே கைரேகை சென்சார் உள்ளது.

போனின் விவரங்கள்:-

டூயல்-சிம் Vivo C 19, 6.44 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும். இந்த போன் ஆண்ட்ராய்டு 10 உடன் நிறுவனத்தின் ஃபன்டூச் ஓஎஸ் 10-ல் இயக்கும். போனின் உள்ளே ஸ்னாப்டிராகன் 712 சிப்செட் உள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் வருகிறது.

ALSO READ  முத்திரைப் பயிற்சி

விவோ வி 19 ஆண்ட்ராய்டு 10 Udan Fun Touch OS 10-ல் இயங்குகிறது. இந்த போனில் 32 மெகாபிக்சல் கேமரா கொண்ட இரட்டை செல்பி கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவுடன் வருகிறது. 

போனின் பின்புறத்தில் உள்ள நான்கு கேமராக்களில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது.

இணைப்பிற்காக இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் வி 5.0, டூயல் பேண்ட் வைஃபை, ஜி.பி.எஸ் ஆகியவை உள்ளது. போனின் உள்ளே 4,500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. விவோ வி 19-ன் எடை 186.5 கிராம் ஆகும்.

ALSO READ  ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

போனின் விலை:-

8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo V19-ன் விலை ரூ.27,990 ஆகும். 

8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜுடன் இந்த போனை ரூ.31,990-க்கு வாங்கலாம். 

இந்த போன் கருப்பு (Piano Black) மற்றும் வெள்ளி (Mystic Silver) வண்ணங்களில் கிடைக்கும். ஆன்லைன் ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட் மற்றும் பிற இ-காமர்ஸ் வலைத்தளங்களிலிருந்து மே 15 (நாளை) ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலிக்கு தீர்வு இதோ….!!!!

Shobika

இலவங்கப் பட்டை – தேன் மருத்துவ குணங்கள்

Admin

Fertility app-கள் குழந்தை பிறப்புக்கு உதவுகிறதா ?

Admin