லைஃப் ஸ்டைல்

காதலர் தின பரிசு குறித்த லிங்குகளை கிளிக் செய்யாதீர்கள்….போலீசார் எச்சரிக்கை….

எந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதோ, அதே அளவுக்கு சைபர் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.SMS மற்றும் E-mail மூலம் மோசடி செய்வது இப்போது வாடிக்கையாகிவிட்டது. இலவச பொருட்கள், இந்த லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் வரும், பரிசுகள் கிடைக்கும் என்பது போன்ற பல போலி செய்திகள் வாட்ஸ் ஆப்-ல் வந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது ஒரு செய்தி உலா வருகிறது.

பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, பல போலி செய்திகள் வாட்ஸ் அப் ஃபார்வேர்டு செய்திகளில் வருகின்றன.அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளித்து காதலர் தின பரிசுகள், செல்போன் ஆகியவற்றை வெல்லலாம் என்ற விளம்பரம் வருகிறது. அதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விளம்பரங்களை நம்பி அந்த லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த லிங்கை திறப்பதன் மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவதுடன், உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணமும் திருடப்படும் ஆபத்து உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

நீங்க மஷ்ரூம் பிரியரா : வாங்க சுவையான மஷ்ரூம் சாப்பிடலாம்

Admin

அம்மிக்கல் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் உங்களுக்கு தெரியுமா?

Admin

மேக்கப் இல்லாமல் அழகா தெரியனுமா ? இத மட்டும் பண்ணி பாருங்க…

Admin