லைஃப் ஸ்டைல்

எந்த மாதிரி பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்?? 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சங்க காலம் முதல் சமீப காலம் வரை பெண்களை கவர ஆண்கள் தான் பல பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதேபோல காலம் காலமாக காட்டப்படும் சினிமாவிலும் சரி என் நிஜ வாழ்விலும் சரி பெண்களுக்கு எது எல்லாம் பிடிக்கும் என்றுதான் நான் தேடி தேடி தெரிந்து கொள்கிறார்கள்.

ஒரு மாறுதலுக்கு எந்த விஷயமெல்லாம் ஆண்களுக்கு பெண்களிடம் பிடிக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் காணலாம்.

பொதுவாக ஒரு பெண் பார்த்ததும் அழகா இருந்தால் தான் ஆண்களுக்கு பிடிக்கும் என்ற தப்பான கருத்து நிலவி வருகிறது. உண்மையில் சொல்லப்போனால் பெண்களிடம் உள்ள வேறு சில விஷயங்கள் கூட ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். எனவே காதல் என்பது வெளிப்புற தோற்றத்தை அடிப்படையாக கொண்டு மட்டுமே உருவாகுவதில்லை. 

எப்படி ஆண்களின் பேச்சு, கம்பீரம், வீரம் இவைகள் எல்லாம் பெண்களுக்கு பிடிக்குமோ அதைப் போல பெண்களின் புத்திசாலித்தனம், நகைச்சுவை உணர்வு இவைகளைக் கூட ஆண்கள் ரசிப்பார்களாம். ஆண்களை ஈர்ப்பதில் பெண்களின் இந்த வித்தியாசமான குணநலன்களும் முக்கிய பங்கு வகிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆக, காதலில் வெளித்தோற்றம் மட்டுமே முக்கியத்துவம் வாய்ப்பதில்லை. அதையும் மீறி பெண்களின் சில குணாதிசயங்களும் ஆண்களை எளிதாக கவருகின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படி பெண்களின் எந்த குணங்கள் ஆண்களை கவருகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு பெண்ணின் நம்பிக்கை (Confidence):-

நல்ல நம்பிக்கை உடைய பெண் உயர்ந்த சுயமரியாதை கொண்டவளாக காட்சி அளிக்கிறார். எனவே தான் நம்பிக்கை உடைய பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். 

ALSO READ  பஸ்சில் பெண்களுக்கு இலவசம் - ஆட்டோ ஓட்டுநர்கள் கவலை

அவர்களை மணந்து கொண்டால் வாழ்க்கையில் நம்பிக்கையையும் பக்கபலத்தையும் கொடுப்பார்கள் என்று ஆண்கள் நம்புகிறார்கள். அவர்களால் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியும். அவர்களுடன் இருக்கும் ஆண்கள் பாதுகாப்பு உணர்வை பெறுகிறார்கள். 

ஆண்களிடம் பெண்களின் பாதுகாப்பு உணர்வை கொள்கிறார்கள் என்பது மட்டுமல்ல பெண்களிடம் ஆண்களும் பாதுகாப்பு உணர்வைத் கொள்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்க.

​நகைச்சுவை உணர்வு (Humour Sense):-

மகிழ்ச்சி என்பது அனைவரையும் கவரக் கூடிய ஒரு விஷயம் ஆகும் . வாழ்க்கையில் நகைச்சுவை உணர்வு இல்லாதவர்கள் சலிப்பானவர்கள். மகாத்மா காந்தி கூடவே சுவை உணர்வைக் இல்லாவிட்டாலும் என்றோ இறந்திருப்பேன் என்று கூறினார்.

அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நகைச்சுவை உணர்வு அவர்களுக்கு ஒரு அணிகலன். இல்லாவிட்டால் பெண்களுக்கு பொன்நகை விட புன்னகை அழகு என்று அனைவரும் கூறுகிறார்கள். எனவே நகைச்சுவை உணர்வு மிக்க பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். 

இந்த நகைச்சுவை உணர்வு உடைய ஆண்களையே பெண்களும் விடுவார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

​பெண்களுக்கென்றே தனி ஸ்டைல் (Own Style):-

பொதுவாக நாம் நாமாக இருந்தாலே மற்றவர்களுக்கு பிடிக்கும். இதனால்தான் ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு பிரத்தியேக ஸ்டைலை வைத்துக் கொள்கிறார்கள்.

பெண்களின் நடை, டிரஸ்ஸிங் சென்ஸ் ஸ்டைல் எளிதாக சொல்ல வேண்டுமென்றால் நடை உடை பாவனை இவைகள் கூட அவர்களுக்கு ஒரு அணிகலன்களாக செயல்படுகிறது. 

எனவே தனக்கென்ற ஸ்டைல் வைத்த பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்குமாம். நன்கு உடை அணிந்த பெண்கள் ஆண்களின் கவனத்தை அதிகளவில் ஈர்க்கிறார்கள்.  மற்றவர்களை பின்பற்றாமல் உங்களுக்கு என்ன வருகிறதோ அதை செய்தாலே மற்றவர்களுக்கு பிடிக்கும்.

ALSO READ  இரட்டை முககவசம் அணிவது நல்லதா..???கெட்டதா...???

​வெற்றி பெற்ற பெண்கள் (Achievers):-

பெண்கள் தாங்கள் பெற்ற வெற்றியை அதிக சத்தத்தோடு சொல்வது ஆண்களுக்கு பிடிக்காவிட்டாலும் வெற்றி பெற்ற பெண்கள் ஆண்களை எளிதாக கவர்ந்து விடுகிறார்கள். ஏனெனில் செய்துவிடுவேன், செய்துவிடுவேன் என்று கூறுபவர்களை விட செய்து காட்டுவார்களை தானே எல்லோருக்கும் பிடிக்கும்.

நிதி ரீதியாக பாதுகாப்பாக இருப்பது, தொழில் ரீதியாக வெற்றிகரமாக செயல்படும் பெண்கள் ஆண்களை அதிகளவில் ஈர்க்கிறார்கள். ஏனெனில் ஆண்களிடம் நிதி ரீதியான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மிகவும் குறைவு.

இது பெண்களுக்கு தாங்கள் பணத்திற்காக மட்டும் ஆண்களுடன் இல்லை என்ற திருப்தியை வழங்குகிறது. 

​புத்திசாலித்தனம் (Intellectual):-

அறிவு இல்லாத பெண்ணை பொதுவாக ஆண்கள் விரும்புவதில்லை. ஒரு பையன் தனது வாழ்நாள் முழுவதையும் தன் துணையுடன் செலவிட திட்டமிட்டால் அவர் ஒரு புத்திசாலித்தனமான பெண்களையே தேர்ந்தெடுப்பார். ஏனென்றால் நீண்ட கால வாழ்க்கை பயணத்திற்கு தனக்கு உறுதுணையாகவும், சிறந்த ஆலோசகராகவும் ஒரு துணை அமைய வேண்டும் என்பது ஆண்களின் எண்ணம்.

பெரும்பாலான பெண்களுக்கு தேற்ற அறிவு அதிகம். அதனால் நடைமுறை அறிவு சற்று கம்மி தான். ஆகையால் தான் வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையையும் புத்திசாலித்தனமும் அறிவும் கொண்ட பெண்ணால் எளிதாக சமாளிக்க கூடிய பெண்களையே ஆண்கள் விரும்புவார்கள். 

மேற்கூறியவைகள், மட்டுமல்லாது உங்களுக்கு உள்ள தனித்திறமைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். அவையே உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் அமைத்துத் தரும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வீடியோ கேம்ஸ் குழந்தைகளுக்கு நல்லது : 70% பெற்றோர்கள்!

Admin

குறைந்த விலையில் ரியல்மி 5S ஸ்மார்ட்போன் அறிமுகம்

Admin

மீண்டும் ஜியோவின் அதிரடி ஆஃபர்….!

Shobika