உலகம் மருத்துவம்

கொரோனா தடுப்பூசியை தயாரித்த ஜான்சன் & ஜான்சன்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உலக அளவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்குகிறது. இதுவரை 38,000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளையில் 1,70,000 ஆயிரம் பேர் வரை இந்த நோய் பாதிப்பிலிருந்து மீண்டு உள்ளனர்.

இதனிடையே அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தனது துணை நிறுவனமான ஜேன்ஸன் ஃபார்மசீயூடிகல்ஸ் (Janssen Pharmaceuticals) நிறுவனம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஒதுக்கியுள்ளது.

இந்த தடுப்பு மருந்து வரும் செப்டம்பரில் மனிதர்கள் மீது சோதனை செய்ய உள்ளதாகவும், அதன்பின் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது. 

ALSO READ  உலக பணக்காரர்கள் பட்டியலில் 98 வது இடத்தில் இந்தியாவின் ராதாகிஷன் தமானி

இந்த பரிசோதனைக்காக அமெரிக்க அரசின் BARDA (Biomedical Advanced Research and Development Authority) ஒப்பந்தம் போட்டுள்ளது இதற்காக அமெரிக்க அரசு 100 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி உள்ளது.

இதேபோல் மற்றொரு அமெரிக்க நிறுவனமான அபாட் (Abbott) அதிவிரைவு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் சிறிய கருவியைக் கண்டுபிடித்துள்ளதாகவும், இதன்மூலம் 5 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும் என்றும் கூறியுள்ளது.

ALSO READ  மாஸ்க் அணிவதால் மட்டும் கொரோனாவிலிருந்து தப்ப முடியாது-WHO எச்சரிக்கை..

இந்த கருவி ஆய்வுக்குப் பின் இது விரைவில் விற்பனைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. மிகச் சிறிய இந்தக் கருவியைத் தேவைப்படும் இடத்துக்கு எளிதில் எடுத்துச் செல்ல முடியும் எனவும் அபாட் தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பிரான்ஸில் மீண்டும் ஊரடங்கு:

naveen santhakumar

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது – இருபது ஓவர் கிரிக்கெட்டில் 300 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட முதல் வீரர் தோனி

News Editor

படப்பிடிப்பில் பயங்கரம் – நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் உயிரிழப்பு, இயக்குனர் படுகாயம் ..!

naveen santhakumar