மருத்துவம் லைஃப் ஸ்டைல்

அட! ஏலக்காயில் இவ்வளவு நன்மைகளா?!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களில் ஏலக்காயும் ஒன்று. குறிப்பாக , இனிப்பு பதார்த்தங்கள் செய்யும் பொழுது சுவையையும் நறுமணத்தையும் அதிகப்படுத்த பயன்படுத்துவோம். ஆனால், காலம் போகும் போக்கில், இன்று இது ஒரு வாசனைப் பொருளாகவே பயன்படுத்தப்படுகிறது. உண்மையில், இது செய்யும் நன்மைகளைக் கொஞ்சம் தெரிந்துக்கொள்வோமா?

ஜீரண உறுப்பை சீராக்கும்

பசிப்பதே இல்லை, சாப்பிட தோன்றவில்லை என்று சொல்பவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை மென்று சாப்பிட ஜீரண உறுப்புகள் சீராய் இயங்கும்.

ALSO READ  உடலில் ரத்தம் ஊற வேண்டுமா??? 

சளி தொல்லைகளைப் போக்கும்

சளி, இருமல், தும்மல் போன்றவைகளுக்கு ஏலக்காய் நல்ல மருந்து.

தொடர் விக்கல்

சில நேரங்களில் தொடர்ந்து ஏற்படும் விக்கல்களை நிறுத்த ஏலக்காய் பயன்படுகிறது. அது மட்டுமன்றி , வாயில் உள்ள கிருமிகளை அழிக்கவல்லது.

ALSO READ  பருக்கள் பட்டென்று மறைய பயனுள்ள குறிப்புகள் :

ஏலக்காய் எண்ணெய்

ஏலக்காயிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் சருமத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.

மற்ற பலன்கள்

ஏலக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப் படுத்தும். பயணத்தின் போது மயக்கம்,வாந்திகளால் அவஸ்தை ஏற்படுபவர்கள் இரண்டு ஏலக்காய்களை வாயில் போட்டு மென்று கொள்ளுங்கள். தொந்தரவுகள் ஏற்படாது இருக்கும்.

  • Dr.வைஷ்ணவி. க

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விவாத பொருளான ட்ரம்ப் மகள் இவாங்காவின் ஆடை

naveen santhakumar

30 வயதை கடக்கும் ஆண்களிடம் நிகழக்கூடிய மாற்றங்கள் :

naveen santhakumar

அம்பானி வீட்டு கார் டிரைவர் ஆக ஆசையா ?, அப்ப இதை தெரிஞ்சிக்கங்க

Admin