மருத்துவம்

குளிர்காலத்தில் நீங்கள் வெங்காயத்தை சாப்பிட வேண்டிய காரணங்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

குளிர்காலத்தில் நீங்கள் வெங்காயத்தை சாப்பிட வேண்டிய காரணங்கள்

இந்திய உணவு வகைகள் மட்டுமல்லாமல் எந்த ஊர் உணவாக இருந்தாலும் அதன் சுவை, மணத்தை உடனடியாக வெளிப்படுத்த சிலவற்றை சேர்ப்போம் அல்லவா..அப்படி நாம் சேர்க்கும் முக்கிய பொருட்களில் வெங்காயம் இல்லாமல் எந்த உணவும் இருக்காது. அதன் நறுமணம் மற்றும் தனித்துவமான சுவையால் சந்தைகளில் வெங்காயத்திற்கு எப்போதுமே தனி மவுசு தான். குளிர்காலத்தில் நாம் அதிகமாக வெங்காயத்தை சாப்பிட வேண்டுமென்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

காரணம்,

  1. வெங்காயத்தில் ஃபிளாவனாய்டுகள் இருப்பது ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக அமைகிறது. ஃபிளாவனாய்டுகளின் முக்கிய சத்துக்கள் வெங்காயத்தின் வெளிப்புற அடுக்குகளில் உள்ளது. எனவே நாம் வெங்காயத்தின் பல அடுக்குகளை உரிப்பதால் ஊட்டச்சத்து இழக்க நேரிடும்.
ALSO READ  கால் ஆணியை குணமாகும் தக்காளி

2.வெங்காயத்தில் வைட்டமின் சி ஆதாரமாக பைட்டோ கெமிக்கல்கள் இருப்பதால் குளிர்காலத்தில் தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன.

3.வெங்காயம் மனச்சோர்வின் அறிகுறிகளை எதிர்த்துப் போராடவும், தூக்கத்தைத் தூண்டவும் உதவும். மேலும் ஃபோலேட் இருப்பது வயிற்று வியாதிகளை குணப்படுத்துவதற்கும் பசியை மேம்படுத்துவதற்கும் சிறந்தது.

  1. குளிர்காலத்தில் சிலருக்கு அடிக்கடி மூக்கிலிருந்து இரத்தம் வடியும். இதனை தடுக்க வெங்காயத்தினை நாசிக்கு கீழ் வைத்து முகர வேண்டும். அதிலிருந்து சிறிய துண்டு உள்ளிழுக்கப்படுவதால் உடனடியாக மூக்கின் இரத்தப்போக்கு நிறுத்தப்படும்.
  2. அளவுக்கதிகமாக வெங்காயத்தினை நாம் உண்டால் நம் வாய் கடுமையான துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். ஆனால் வெங்காயம் உண்பது ஆரோக்கியமானதாக கூறப்படுகிறது. அதன் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் பல் சிதைவை தாமதப்படுத்தவும், ஈறு நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடவும் உதவுகின்றன.
ALSO READ  திடீரென நீல நிறமாக மாறிய கால்கள் : காரணம் என்ன தெரியுமா

6.வெங்காயம் புற்றுநோயைத் தடுக்க உதவும். வெங்காயத்தில் குர்செடின் இருப்பது புற்றுநோயைத் தடுக்க உதவும். ஒரு சில ஆய்வுகளின்படி, வெங்காயம் உட்கொள்வது வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களைத் தடுக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
7.வெங்காயத்தை உட்கொள்வது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவும். இதன் மூலம் எல்.டி.எல் அளவை திறம்பட குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வெங்காயம் உதவுகிறது.

8.காய்ச்சல், ஜலதோஷம், அலர்ஜி போன்ற பருவகால நோய்களைத் தடுக்க வெங்காயம் குளிர்காலத்திற்கு நல்லது. வெங்காய சாறு கலவையை சேர்த்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் பருவகால வியாதிகளைத் தடுக்கலாம்.

  1. வெங்காயத்தில் குரோமியம் இருப்பது இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்தவும், உடலில் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்கவும் உதவும்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

8 போட தெரியுமா????வண்டியில இல்ல வாக்கிங்ல…..

naveen santhakumar

கோவாக்சின், கோவிஷீல்டு இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து போட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

News Editor

பாதிப்புகளிலிருந்து கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள் :

naveen santhakumar