மருத்துவம் லைஃப் ஸ்டைல்

ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நம் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க நாம் அனைவரும் கடுமையாக உழைக்கிறோம், ஒவ்வொரு நாளும் நம் அனைவருக்கும் நல்லது என்று ஒன்றை உட்கொள்கிறோம். அந்த வகையில் தான் சத்தான உணவாக கருதப்படும் பாதாமை அதிக அளவில் உண்கிறோம்.

பாதாம் பருப்பை சாப்பிடுவதால் எண்ணற்ற பயன்கள் நமக்கு கிடைக்கும். உடல் சக்தியை பெறுவதற்கு எல்லா விதமான பானங்களிலும், உணவுப்பொருள்களிலும் சேர்த்து சாப்பிடலாம்.

பாதாமில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஈ, ஃபைபர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் பாதாமில் உள்ளது.

இது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், ஒரு நாளில் 3-4 பாதாம் பருப்பு சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அதே சமயம், இதை அதிகமாக சாப்பிட்டால் அது உடல்நல பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. 

யாரெல்லாம் சாப்பிடக்கூடாது:-

ALSO READ  சிறுத்தைக்குட்டிகள் கூட வாடகைத்தாய் மூலம் பிறக்குமா?

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சிறுநீரக கற்கள் அல்லது பித்தப்பை நோய் பாதிப்பு உள்ளவர்களும் பாதாம் பருப்பை உட்கொள்ளக்கூடாது.

ஏதேனும் உடல்நலப் பிரச்சினை காரணமாக நீங்கள் ஆண்டிபயாடிக் மருந்தை உட்கொண்டால், பாதாம் சாப்பிட கூடாது.

அதிக அளவு பாதாம்பருப்பை உண்பதால் ஏற்படும் பாதிப்புக்கள்:-

பாதாம் பருப்பில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கு நல்லது. அதே நேரத்தில், பாதாம் அளவுக்கு அதிகமாக உட்கொண்ட பிறகு செரிமான பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன. இதனால் வயிற்றுப்போக்கு, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்படும். 

ALSO READ  அடேங்கப்பா….! ரப்பர் ஷூவின் விலை ₹ 40,000…! 

பாதாமில் அதிக அளவு வைட்டமின் E காணப்படுகிறது, நமது உடலுக்கு சராசரியாக 15 மில்லி கிராம் மட்டும் தான் விட்டமின் E தேவைப்படுகிறது. ஆனால், ஒரு கப் பாதாமில் 25 மில்லிகிராம் விட்டமின் E உள்ளது. இதன் காரணமாக தலைவலி, மங்கலான பார்வை, உடல்சோர்வு, வயிற்றுப்போக்கு போன்றவைகள் ஏற்படும்.

சாதரணமாக பாதாம் பருப்பை சாப்பிடுவதை விட உப்பு-காரம் சேர்த்து சாப்பிட்டால், உடலில் நச்சுத்தன்மை உண்டாகும். இதில் ஹைட்ரோசயனிக் அமிலம் இருப்பதால், மூச்சு கோளாறு ஏற்படும். குறிப்பாக காரம் சேர்க்கப்பட்ட பாதாமை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடவே கூடாது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

உடை அணிவதில் பருமனான தேகம் கொண்டவர்களுக்கான சில டிப்ஸ் :

Shobika

மீண்டும் ஜியோவின் அதிரடி ஆஃபர்….!

Shobika

அழகை தக்கவைக்க அசத்தலான டிப்ஸ் :

Shobika