மருத்துவம்

இந்த காய்கறிகளை சாப்பிட்டால் மாரடைப்பு வராது:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒருவரது ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு வாரத்திற்கு பல முறை குறுக்குவெட்டுக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.இதில் கலோரிகள் குறைவாகவும், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான ஃபோலேட் மற்றும் வைட்டமின்களான சி, ஈ மற்றும் கே மற்றும் நார்ச்சத்து போன்றவற்றை அதிகமாகவும் கொண்டுள்ளன. 

புதிய ஆய்வு ஒன்றில், அதிகளவு குறுக்குவெட்டுக் காய்கறிகளான ப்ராக்கோலி, முளைக்கட்டிய பிரஸ்ஸல்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் போன்றவை, இரத்த நாள நோய்களான மாரடைப்பு அல்லது பக்கவாத நோய்களின் அபாயத்தைக் குறைப்பது தெரிய வந்தது.

ஒருவருக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் இரண்டுமே கொழுப்புக்களின் தேக்கம் மற்றும் இரத்த நாளங்களின் சுவர்களில் படியும் கால்சியம் படிவுகளால் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில காய்கறிகளை சாப்பிட வேண்டும். 

ALSO READ  ஆகாஷ் முத்திரை

*ப்ராக்கோலி:

ப்ராக்கோலியை வேக வைத்து அடிக்கடி சாப்பிடுவது, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை குறைத்து இதய நோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் ப்ராக்கோலி இதய நோயின் அபாயத்தைக் குறைப்பதோடு, வலிமையான எலும்புகளுக்கும், கண் பார்வையை மேம்படுத்தவும், புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது.

*காலிஃப்ளவர்:

100 கிராம் காலிஃப்ளவரை சாப்பிடும் போது, அதில் 92 கிராம் நீர்ச்சத்து கிடைக்கிறது. ஆகவே இந்த காய்கறியை அதிகம் உணவில் சேர்க்கும் போது, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து இரத்த ஓட்டம் சீராக இருக்கிறது. மேலும் காலிஃப்ளவரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி வைரல் பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் போன்றவையும் நிறைந்துள்ளது.

*முட்டைக்கோஸ்:

முட்டைக்கோஸில், குறிப்பாக சிவப்பு/ஊதா நிற முட்டைக்கோஸ் இதயத்திற்கு நல்லது. இந்த காய்கறி பீட்டா-கரோட்டீன், லுடின் மற்றும் பிற இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து இதயத்தை பாதுகாக்கிறது, இது இதய நோய்களையும் தடுக்க உதவுகிறது.

ALSO READ  முருங்கையின் முத்தான பயன்கள்:

*முளைக்கட்டிய பிரஸ்ஸல்ஸ்:

உணவில் இந்த காய்கறிகளை அதிகம் சேர்ப்பதன் மூலம், எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது, சர்க்கரை நோய் நிர்வகிக்கப்படுகிறது, இதய நோய் மற்றும் புற்றுநோய்களின் அபாயம் குறைக்கப்படுகிறது.

*கேல்:

கேல் கீரை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவி புரிந்து, இதய நோயின் அபாயத்தையும் குறைக்கிறது. உணவுப் பொருட்களிலேயே கேல் கீரையில் தான் வைட்டமின் கே அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து தான் இரத்தம் உறைதலில் ஈடுபடும் முக்கிய ஊட்டச்சத்தாகும். மேலும் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் என்பது சோதனை-குழாய் மற்றும் விலங்குகளின் மீதான ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இயற்கை தங்கபஸ்பம்: இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி பூ ஜூஸ்! 

naveen santhakumar

உங்கள் காலை உணவை இவ்வாறு சாப்பிட தொடங்குங்கள்….உடலை உன்னதமானதாக்கும் உணவு….

naveen santhakumar

வழுக்கை தலைக்கு ஆதிமருந்தாகும் மாதுளை பூ

Admin