மருத்துவம் லைஃப் ஸ்டைல்

பாதிப்புகளிலிருந்து கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சூரியனிடம் இருந்து வெளிப்படும் அதிக வெப்பம் சருமத்திற்கு மட்டுமல்ல, கண்களுக்கும் தீங்கு விளைவிக்கும். சூரிய ஒளிக் கதிர்கள் கண்களின் மேற்பரப்பில் படும்போது எரிச்சல் உண்டாகும். தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது ‘போட்டோகெராடிடிஸ்’ எனப்படும் நோய் பாதிப்பு உண்டாகும். குறிப்பாக கண் இமைகள், கார்னியா மற்றும் கண்ணின் முக்கிய பகுதிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.

வெப்பத்தின் வெளிப்பாடு அதிகரிக்கும்போது கண் இமைகள் மற்றும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். சூரியனால் சருமத்தை விட கண்கள் தான் அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும். சருமம் இயற்கையாகவே புற ஊதாக்கதிர்வீச்சுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.” மெலனின்” எனும் நிறமி அதற்கு உதவுகிறது. அதுபோல் கண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

ALSO READ  TikTok- கினால் அதிக நேரங்களை செலவழிக்கும் இந்திய மக்கள் - அதிர்ச்சி தகவல்
  • புற ஊதாக்கதிர்களிடம் இருந்து கண்களை பாதுகாப்பதற்கு சன் கிளாஸ் அணிந்துகொண்டு வெளியே செல்வது நல்லது. அதுபோல் கண்கள், கழுத்து பகுதியை மறைக்கும் விதமாக அகலமாக தொப்பியை அணிந்து கொள்வதும் பாதுகாப்பானது.
  • சன் கிளாஸ் கண்களுக்கு மிக நெருக்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் லென்ஸ்கள் பல கோணங்களில் இருந்து கண்களை பாதுகாக்க உதவும்.
  • பச்சை, சிவப்பு நிறங்களை கொண்ட சன்கிளாஸ்கள் அணிவது நல்லது. அதில் இருக்கும் இருள் தன்மை கொண்ட லென்ஸ்கள் புற ஊதாக்கதிர் களிடம் இருந்து பாதுகாப்பு வழங்கும்.
  • வீட்டின் ஜன்னல்கள், கார் கதவுகள் போன்றவற்றில் புற ஊதாக்கதிர் வீச்சை தடுக்கும் பிலிம்களை ஒட்டுவதும் நல்லது. அதுவும் கண்களுக்கு பாதுகாப்பு தரும்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சருமத்தின் அழகை மேம்படுத்த உதவும் நெய் :

Shobika

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் !

Admin

அரிதாக வானில் நிகழப்போகும் கங்கண சூரியகிரகணம்…!!!

Shobika