உலகம் மருத்துவம்

கொரோனா வைரஸை குணப்படுத்த உலக சுகாதார நிறுவனம் (WHO) நான்கு முக்கிய மருந்துகளை சோதனை செய்கிறது…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share


உலக நாடுகள் அனைத்தும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் பலவிதமான மருத்துவ கலவைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

இதனிடையே உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நான்கு முக்கிய மருந்துகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Chloroquine மற்றும் Hydroxychloroquine:-

மலேரியாவை குணப்படுத்தும் மருந்துகளான க்ளோரோகுயின் (Chloroquine) மற்றும் ஹைட்ரோஸிக்ளோரோகுயின் (Hydroxychloroquine).

கடந்த வாரம் செய்தியாளர்கள் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்த இரண்டு மருந்துகளும் இந்த கொரோனா வைரஸ் பரவலிலை கட்டுபடுத்துவதில் மிக முக்கியமான பணியை செய்யும் என்றார்.

இந்த இரண்டு மருந்துகளும் பல ஆண்டுகள் சிறந்த மலேரியா நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ALSO READ  அடுத்த அதிர்ச்சி....கினியாவில் புதிய கொடிய வைரஸ்....!!!

Remdesivir:-

ரெம்டெஸிவிர் ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்தாகும். உலக அளவில் முன்பு தோன்றிய பல கொடிய வைரஸ்களை எதிர்த்துப் போராடி உள்ளது.

குறிப்பாக எபோலா போன்ற வைரஸ் நோய்களுக்கு இந்த மருந்து நன்கு பயன்பட்டுள்ளது. எனவே தற்போது பரவிவரும் கொரோனாவிற்கு இது நிச்சயம் பலன் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Lopinavir மற்றும் Ritonavir:-

HIV நோய்க்கு இந்த இரண்டு மருந்து கலவைகள் நல்ல பலனளித்து வருகிறது.

இதுவரையில் HIV நோய்க்கு முழுமையான மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும் இந்த இரண்டு மருந்துகளும் நோயாளிகளின் நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் உறுப்புக்கள் சீக்கிரம் பாதிக்கப்படுவதை தடுப்பதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த இரண்டு மருந்துகள் தான் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளிகளான இத்தாலி தம்பதிகளுக்கு கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது இடங்களில் ஓணம் கொண்டாட தடை :

அதேசமயம், மேற்கண்ட இரண்டு மருந்துகளும் சீனாவில் பெரிய பலனை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த மருந்துகள் இரண்டும் நிச்சயமாக கொரோனா வைரஸை குணப்படுத்தும் என்று நம்புகிறது.

Interferon-Bete மற்றும் Lopinavir, Ritonavir:-

Cripple வைரஸூக்கு இந்த இண்டர்ஃபெரான்-பீட்டா நல்ல பலனை தந்தது.

மேலம் இந்த மருந்து கலவை (Lopinavir, Ritonavir & Interferon-Beta) மத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பரவிய மெர்ஸ் (MERS) வைரஸூக்கு அளிக்கப்பட்டது. குறிப்பாக சவூதி அரேபியாவில் மெர்ஸ் நோய்க்கு இந்த மருந்து தான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மகத்துவங்கள் நிறைந்த சப்பாத்திக்கள்ளி..

naveen santhakumar

இந்தியர்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல் பிரதமர் மகன்!… 

naveen santhakumar

ராணுவ பயிற்சியானது நிஜமான போரை போன்று இருக்க வேண்டும்-சீனா அதிபர்

naveen santhakumar