அரசியல் உலகம்

அரச குடும்பத்தின் கௌரவத்தை இழிவுபடுத்திவிட்டாள் என் மகள் : மேகனின் தந்தை குற்றச்சாட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இளவரசர் ஹாரி-மேகன் தம்பதி அரச குடும்பத்திலிருந்து விலகுவதாகவும், தங்கள் வாழ்வை இனி கனடாவில் கழிக்க போவதாகவும் சில தினங்களுக்கு முன்னர் இருவரும் அறிவித்தனர்.

இவ்வாறு அறிவித்ததன் மூலம் தன் மகள் அரச குடும்பத்தின் கௌரவத்தை இழிவுபடுத்திவிட்டதாக 74 வயதான மேகனின் தந்தை தாமஸ் மார்கெல் குற்றம்சாட்டியுள்ளார். இவர் ஹாலிவுட்டின் முன்னாள் ஒளியமைப்பு கலைஞர் ஆவார்.

இது தொடர்பாக தாமஸ் கூறும்போது இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது, உண்ளையில் ஒவ்வொரு பெண்ணின் கனவையும் கலைத்துள்ளது. எந்தவொரு இளம்பெண்ணிற்கும் இளவரசியாக வேண்டும் என்ற கனவுள்ளது. இக்கனவு இவளுக்கு நனவானது. ஆனால் அதை இப்போது அவள் தூக்கியெறிந்து விட்டாள். இதை இவள் பணத்திற்காகவே தூக்கியெறிந்தது போல் தெரிகிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேகன் ஹாரியை 2008-ல் மணந்த போது இருவரும் ” அரச குடும்பத்தின் ஓர் அங்கமாக இருப்பதற்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமான” கடமையையும் எடுத்துக்கொண்டனர்.

தற்போது பிரிந்து செல்வதன் வாயிலாக அரச குடும்பத்து மரியாதையை சேர்ந்து ஆழிக்கிறார்கள். இதை இவர்கள் செய்திருக்க கூடாது. இது கேலிக்குரியது. இதன் மூலம் அரச பாரம்பரியத்தை சிறுமைபடுத்திவிட்டனர். இதனிடையே இளவரசர் ஹாரி மேகன் மீது வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் தாமே பொருப்பு என்று கூறியுள்ளார்.

ALSO READ  சிரிச்சா அலுவலகத்துக்குள் செல்ல முடியம்

ஹாரி-மேகன் தம்பதி அரச பொறுப்புகளை துறக்க காரணம் மேகன் ஏற்கனவே திருமணமானவர் என்றும் முன்னாள் கணவர் மூலம் குழந்தையும் உள்ளது. மேகன் வெள்ளையின தந்தைக்கும் கருப்பின தாய்க்கும் பிறந்தவர். இது போன்ற காரணங்களால் அரச குடும்பத்தால் தொடர்ந்து மேகன் புறக்கணிக்கப்பட்டதாகவும், அரச குடும்பத்தினர் பொது நிகழ்வுகளில் மேகன் பங்கேற்பதை விரும்பாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் ஹாரி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அரச குடும்பத்தில் இருந்து விலகுவகு குறித்து ஹாரி கூறியதாவது: எனக்காகவும், எனது மனைவிக்காகவும் நான் இந்த முடிவை எடுத்தேன். இது மிக எளிதாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. பல சவால்களை எதிர்கொண்ட பின் பல மாதங்களான நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின் தான் இந்த முடிவை எடுத்தோம். நாங்கள் விலகி செல்லவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இங்கிலாந்து தான் எனது தாய் வீடு. அரண்மனையை நான் நேசிக்கிறேன். அது எப்போதும் மாறாது.

ALSO READ  இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின்… புகழ்ந்து தள்ளிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

எனக்கும் மேகனுக்கும் திருமணம் நடந்தவுடன் நாங்கள் மிகுந்த உற்சாகமுடன் இருந்தோம். நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால், பின்னால் ஏற்பட்ட சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ராணி, காமன்வெல்த் மற்றும் எனது ராணுவ பிரிவுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அது சாத்தியமாகவில்லை. நான் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறேன் என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சீமான் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல் !

News Editor

எச்சரிக்கை!!!!!கடிதத்தின் மூலம் கொரோனா வைரஸை பரப்ப ஏற்பாடு :

naveen santhakumar

பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள தடை – உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

Shobika