அரசியல் இந்தியா

சட்டசபையில் ஒலித்த “Go Back Governor” கோஷம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கேரள சட்டப்பேரவையில் நிகழாண்டின் முதல் கூட்டம் ஆளுநர் ஆரீஃப் முகமது கான் (Arif Mohammad Khan) உரையுடன் இன்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த ஆளுநரை சட்டப்பேரவை வளாகத்தில் வரவேற்ற முதலமைச்சர் பினராயி விஜயன் பின்னர் அவரை பேரவைக்குள் அழைத்து வந்தார்.

அப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் ஒன்றுகூடி ஆளுநரை உள்ளே விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அவைக் காவலர்களின் பாதுகாப்புடன் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை முதல்வர் பினராயி விஜயன் பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தார்.

ALSO READ  Bonus 125% + 250 F

தனது உரையின்போது குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான வாசகங்களை படிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிய ஆளுநருக்கு காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மேலும் சபாநாயகர் இருக்கை முன் திரண்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவைக்குள் பாதகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பியதால் அவையில் அமளி நிலவியது.

ALSO READ  Официальные Казино и России: Лучшие Интернет Бренды С Онлайн Слотам

இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்கள் சபை காவலர்களால் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசின் உரையை ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வாசித்தார்.

இது குறித்து கண்டனம் தெரிவித்த BJP தலைவர் ஜெய சூர்யன்:- இது கடும் கண்டனத்திற்குறியது. எதிர்கட்சிகளின் இந்த செயல் தேசத்திற்கும் அரசியலமைப்பிற்கும் எதிரானது என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்; காணொலி மூலம் திறந்துவைத்த பிரதமர்!

naveen santhakumar

Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном времени Онлай

Shobika

புதுச்சேரியில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை..!

News Editor