அரசியல்

டெல்லியில் ஆட்சி அமைக்கப்போவது யார்?… இன்று வாக்கு எண்ணிக்கை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.

70 உறுப்பினர்கள் அடங்கிய டெல்லி சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

672 வேட்பாளர்கள் போட்டியிட்ட டெல்லி சட்டசபை தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளிலும், பாஜக 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் 4 தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ளன.

ALSO READ  அண்ணாமலை மீது பாயுமா நடவடிக்கை?… எச்சரிக்கையை மீறி வீடியோ வெளியீடு!

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் ஈடுபாடு காட்டவில்லை என்பதால் ஆம் ஆத்மி – பாஜக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. 8ம் தேதி நடைபெற்ற தேர்தலில் வாக்குப் பதிவில் 62.59% வாக்குகள் பதிவானது.

இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது இன்று மதியத்திற்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் என்று தெரிந்து விடும். அதேசமயம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி மீண்டும் டெல்லியில் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய வம்சாவளியினர் இங்கிலாந்து பிரதமர் ஆனார்!

Shanthi

ஒரே நாளில் 11 லட்சம் பேர்… ஆம் ஆத்மி கட்சிக்கு இவ்வளவு பவரா…

Admin

ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு

Admin