அரசியல் தமிழகம் வணிகம்

தமிழக குடும்பத்தின் ஒவ்வொருவரின் தலையில் ரூ.2,63,976 கடன் – எப்படி தெரியுமா?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். .

வெள்ளை அறிக்கையில் ஏற்படும் தவறுகளுக்கு நான்தான் பொறுப்பு என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்று தெரிவித்தார். ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் அறிக்கையை ஆய்வு செய்த பின்பு அறிக்கை தயார் செய்யப்பட்டதாவும் நிதி அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவதால் வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம் என்றும் மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் இது பற்றி நிதி அமைச்சர் தெரிவிக்கையில்,

திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனாவை தடுப்பதில் முழு கவனம் செலுத்தினோம்

ALSO READ  நாகை எம்.பி. செல்வராஜுக்கு கொரோனா...

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது இதுவே.

White Paper on finances before Budget: Minister - The Hindu

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை மின்சாரத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நிதி நிலைமை எப்படி இருந்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது

2016 – 21ல் சுமார் 1,50,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய்ப் பற்றாக்குறை ஏற்பட்டது. அந்தத் தருணத்தில் வாங்கிய 3 லட்சம் கோடி ரூபாய் கடனில் 50 சதவீதம் இந்தப் பற்றாக்குறையை சமாளிக்கச் செலவிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். .

இதன்விளைவாக ஒவ்வொரு தமிழக குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் ரூபாய் கடன் உள்ளது என தமிழக நிதித்துறை அமைச்சர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  தேவையின்றி வெளியே சுற்றித்திரிந்த வாகனங்கள் பறிமுதல்; எச்சரிக்கும் காவல்துறை !

எனவே தற்போது தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை 5 லட்சத்து 24,574 கோடியாக உள்ளது என்றும்
அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தது என நிதித்துறை அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அரசு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தை கொடுக்கவே கடன் பெறவேண்டிய நிலை கடந்த ஆட்சியில் இருந்ததால் தான் கடனில் தமிழ்நாடு மூழ்கி வருகிறது

Tamil Nadu Chennai Latest News Live Updates: Chennai Latest News,  Corporation, Madras High Court, Weather, Politics, Stalin

அதுபோன்று தமிழ்நாடு மின்துறை நிதிநிலைமை மிக மோசமாக உள்ளது. இந்தியாவில் பீகார் மாநில மின்துறை நிதிநிலைமை மோசமாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் பீகார் மாநில மின்துறை நிதிநிலைமையைவிட தமிழ்நாடு மின்துறை நிதிநிலைமை மோசமாக உள்ளது என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாதம் தோறும் ரூ.1000 திட்டம்; தொடங்கி வைத்தார் முதல்வர் !

News Editor

மதுக் கடைகள் திறப்பு: மது வாங்க 7 வண்ணங்களில் டோக்கன்.. 

naveen santhakumar

கொரோனா தொற்றால் ஓவியர் இளையராஜா மறைவு…! 

naveen santhakumar