அரசியல் தமிழகம்

வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு: தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி முந்தைய ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

1983-ஆம் ஆண்டின் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

மேலும் இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கண்ணம்மாள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வன்னியர்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனவும், அதன் அடிப்படையில் நியமனங்கள் நடைபெற்று வருவதால் அதை தடுக்கும் வகையில் சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ALSO READ  ஓ.பி.சி பட்டியலில் திருநங்கைகள் -மத்திய அரசு முடிவு..!

அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இட ஒதுக்கீட்டால் யாருக்கும் பாதிப்பில்லை என்பதால் தடைவிதிக்க அவசியம் இல்லை என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இடைக்கால கோரிக்கை மீதான வாதங்களை இரு தரப்பும் முன்வைக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணைக்கான தேதி குறித்து ஆகஸ்ட் 25 முடிவுசெய்வதாக தெரிவித்திருந்தனர்.

ALSO READ  வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் - சென்னை உயர்நீதிமன்றம்!

அதன்படி, இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது, இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

மேலும் 10.5% உள்ஒதுக்கீட்டின் கீழ் நியமனங்கள் மேற்கொள்ள தடைவிதிக்காமல் வழக்கு செப்டம்பர் 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

Admin

கமலின் தோல்விக்கு மறைமுகமாக செயல்பட்டார் மகேந்திரன் !

News Editor

3 நாளில் 39 பேர் பலி; பீதியில் பொதுமக்கள் !

News Editor