அரசியல் ஆல்பம் இந்தியா உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் லைஃப் ஸ்டைல் வணிகம் விளையாட்டு ஜோதிடம்

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இனி ரூ.2000 கிடையாது – ரிசர்வ் வங்கி அடுத்த அதிரடி

ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது.

அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒரு சாரார் வரவேற்பு தெரிவித்தாலும், இன்றளவும் பலரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

அத்துடன், அதிக மதிப்புடைய புதிய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டதால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவியது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளானதால், புதிய ரூ.10, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளையும் ரிசர்வ வங்கி வெளியிட்டது.

ALSO READ  மணிப்பூரில் பெய்த தொடர் மழையால் நிலச்சரிவு:

இந்நிலையில், உத்தரவின் பேரில் ரூ.2000 நோட்டுக்களை ஏ.டி.எம் மையங்களில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் பாரத ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ.2000 நோட்டுக்களை நீக்கிய பின்னர், ஏடிஎம்களில் இருந்து ரூ.500 நோட்டுக்களை நீக்கும் பணிகள் நடைபெறும் எனவும் தெரிகிறது.

ALSO READ  கொரோனா: பீதியடைய வேண்டாம் சாதாரண காய்ச்சல் போன்றதுதான்- குணமடைந்தவர் கூறுகிறார்...

அதிக மதிப்புடைய நோட்டுக்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து, குறைவான மதிப்புடைய நோட்டுக்களின் புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு பிரத்யேகமான ஏற்பாடு :

naveen santhakumar

பப்ஜி செயலிக்கு தடை?- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்…

naveen santhakumar

கொரோனாவை விரட்ட பாபிஜி அப்பளம் சாப்பிடுங்கள் கூறி விளம்பரம் செய்த மத்திய இணை அமைச்சருக்கு தொற்று உறுதி!…

naveen santhakumar