அரசியல் இந்தியா

2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

2020-2021 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் இன்று காலை 11மணிக்கு நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கி சுமார் 2.45 மணி நேரமாக பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார்.

வருமான வரி உயர்வு, வரிச்சலுகைகள் உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்போடு மக்கள் காத்திருக்கின்றனர்.

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வருமான வரி விலக்கு தகவல்கள் :
புதிய வருமான வரியால், 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கான வரி 1.95 லட்சமாக குறைகிறது. நடுத்தர குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்க பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

  • 5 லட்சம் – 7.5 லட்சம் வரை – 10%
  • 7.5 லட்சம் – 10 லட்சம் – 15%
  • 10 லட்சம் – 12.5 லட்சம் – 20%
  • 12.5 லட்சம் – 15 லட்சம் – 25
  • 15 லட்சத்துக்கு மேல் – 30%

நிதி ஒதுக்கீடு விவரங்கள்

  • காஷ்மீர் யூனியன் பிரதேச மேம்பாட்டிற்கு 30,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • 2022 ஜி20 நாடுகளின் மாநாடு நடத்த 100 கோடி ஒதுக்கீடு
  • லடாக் யூனியன் பிரதேசத்திற்கு 5,958 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சுத்தமான காற்று திட்டத்திற்கு 4,400 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கு 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மூத்த குடிமக்கள் மேம்பாட்டிற்கு 9,500 கோடி ரூபார் ஒதுக்கீடு
  • ஜல் ஜீவன் திட்டத்துக்கு 11,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • பழங்குடியின மக்களின் மேம்பாட்டிற்கு 53,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் அடிப்படை கட்டமைப்பை மேம்ப்படுத்த 11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • பெண்களுக்கான திட்டங்களுக்கு 28,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
  • கலாச்சாரத்துறைக்கு 3,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • ரூ. 1.7 லட்சம் கோடி போக்குவரத்து கட்டமைப்புக்கு ஒதுக்கீடு
  • தூய்மை இந்தியா திட்டத்திற்கு 12,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • 2020-21 நிதியாண்டில் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • பிரமரின் ’ஜன் ஆரோக்கிய யோஜனா’ திட்டத்திற்கு 69 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
  • வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு

இந்தியா தற்போது உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதாரம், ஜிஎஸ்டி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது மோடி அரசின் சாதனை. ஜிஎஸ்டி அமலான பிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 4% அளவிற்கு அன்றாட செலவு குறைந்துள்ளது என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

ALSO READ  பிரித்தானிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் இந்தியர்
image

திட்டங்கள்

  • கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க ஒருங்கிணைந்த செயல்திட்டம்.
  • கிராமப்புர பெண்களுக்காக ’தானிய லட்சுமி’ என்னும் பெயரில் புதிய திட்டம்.
  • உலக நாடுகளுடன் இணைந்து நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்க திட்டம்.
  • 1 லட்சம் கிராமங்களை பாரத் நெட் திட்டம் மூலம் இந்த ஆண்டே இணையதளம் மூலமாக இணைக்க திட்டம்.
  • வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு 27,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய திட்டம்.
  • தனியார் – அரசு பங்களிப்புடன் 150 ரயில்களை இயக்க திட்டம்.
  • இந்தியாவில் செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம்.
  • 15 லட்சம் கோடி ரூபாய் விவசாயக்கடன் வழங்க திட்டம்.
  • விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான திட்டங்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
  • 15 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயம்.
  • விவசாயிகளுக்கு கிசான் ரயில் : குளிர்சாதன வசதியுடன் பொருட்களை விற்பனைக்கு அனுப்பும் வசதி.
  • 15 லட்சம் கோடி ரூபாய் விவசாயக்கடன் வழங்க திட்டம் விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்ட் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக்க மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும்.
  • தண்ணீர் பற்றாக்குறை உள்ள 100 மாவட்டங்களில் தனிக்கவனம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
  • 20 லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள் அமைக்க உதவி செய்யப்படும்.
  • அனைத்து வகையான உரங்களையும் சமமாக பயன்படுத்தும் வகையில் திட்டம்.
  • சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் முலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்
  • 2021-ம் ஆண்டுக்குள் 108 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பால் உற்பத்தி அதிகரிக்க இலக்கு
  • 2022-2023-ம் ஆண்டுக்குள் 200 லட்சம் டன் அளவிற்கு மீன் உணவுகள் சார்ந்த உற்பத்திக்கு இலக்கு

பட்ஜெட்டில் வங்கிகள்

  • வங்கி வாடிக்கையாளர்களின் காப்பீடு வரம்பு 1 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்வு செய்யப்பட்டது.
  • மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தி ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
  • 2020-ம் ஆண்டு பொருளாராத வளர்ச்சி 10% எட்டும், 2020-2021-ம் ஆண்டு நிதிப்பற்றாக்குறை இலக்கு 3.5 % இருக்கும்.
  • வர்த்தக ரீதியிலான வங்கிகளின் நிலைமையை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
  • வங்கி வாடிக்கையாளர்களுக்கான காப்பீடு வரம்பு 5 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு.

மேலும் மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்பனை செய்யப்படும். எல்ஐசியில் மத்திய அரசுக்கு உள்ள பங்குகளில் ஒரு பகுதி விற்பனை செய்யப்படும்.

பட்ஜெட்டில் கல்வி மற்றும் மருத்துவ துறை…

  • ஆயுஷ்மான் திட்டத்தின் படி அரசு – தனியார் பங்களிப்புடன் 2000 மருத்துவமனைகள் அமைக்கப்படும்
  • மலிவு விலையில் மருந்துகள் விற்பனை செய்ய ‘மக்கள் மருந்தகங்கள்’ அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்
  • புதிய கல்விக்கொள்கை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்
  • மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள்
  • ஆன்லைன் மூலம் கல்வி பயின்று பட்டம் வழங்கும் முறை முன்னணி பல்கலைக்கழகங்களில் அமைக்கப்படும் .
ALSO READ  ராகுல் காந்தியை கிண்டல் செய்த நிர்மலா சீதாராமன்..

கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய மத்திய பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது .

மேலும் ,சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் வரை தற்போது தணிக்கையிலிருந்து விலக்கு உள்ளது. கார்ப்பரேட் வரியை குறைத்தது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு ஆகும்.

குறைந்த விலை வீட்டு கடன்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி மானியம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

பான் கார்டுகளை உடனடியாக விநியோகிக்க புதிய முறை அமல்படுத்தப்படும் என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

Image result for பான் கார்டுகளை

புதிதாக துவங்கப்படும் மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 15 % என நிர்ணயம் செய்யப்பட்டது. 2024-ம் ஆண்டுக்குள் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும்,நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தகவல் பூங்காக்கள் அமைக்கப்படும், தேஜஸ் வகை ரயில்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படும்,தேசிய ஊட்டச்சத்து திட்டம் மூலம் 10 கோடி குடும்பங்கள் பலன் அடையும் என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

மேலும் பொருளாதார ரீதியில் பலன்பெறும் வகையில் 6000 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கபடும்,ரயில் தடங்களுக்கு அருகே சோலார் மின் உற்பத்தி மையங்கள் அமைக்கப்படும், அரசு – தனியார் பங்களிப்புடன் 5 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிகளாக மேம்படுத்தப்படும், நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பொறியாளர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்படும்

பட்ஜெட்டில் தமிழகம்

தமிழகத்தில் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் , ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 5 இடங்கள் வரலாற்று சிறப்புமிக்க அடையாளங்களாக மாற்றப்படும்.

சென்னை-பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்படும் 2,000 கிலோமீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும் என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.

Image result for நிர்மலா சீத்தாராமன்

டிஜிட்டல் இந்தியா மூலமாக உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. 2014 மார்ச் மாதம் 52.2 % இருந்த மத்திய அரசு கடன் 2019 மார்ச் மாதம் 48.7 % குறைந்துள்ளது. சுமார் 16 லட்சம் புதிய வரி செலுத்துபவர்கள் தற்போது உருவாகியுள்ளனர். வரி கணக்கு தாக்கலுக்கு மிகவும் எளிமையான முறை வரும் ஏப்ரல் முதல் அமல்

பட்ஜெட்டின் 3 நோக்கம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தல், பொருளாதாரத்தை மேம்படுத்துதல்,சமுதாயத்தின் மீது அக்கறை செலுத்துதல் தான். நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பலன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

PINUP-AZ Online Casino Pin U

Shobika

வசமாக சிக்கிய கே.பி. அன்பழகன்… அப்செட்டில் இபிஎஸ்-ஓபிஎஸ்!

naveen santhakumar

கொரோனோ இருந்தாலும் பரவாயில்லை. சீன பெண்ணை மணந்த இந்தியர்.

Admin