அரசியல்

தபால் வாக்குப்பெட்டி இருக்கும் அறையில் அதிமுக அமைச்சர்; 25 நிமிடம் நடந்தது என்ன..?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அதிமுக அமைச்சர், தேர்தல் நடத்தும் அதிகாரியுடன் தபால் வாக்கு இருக்கும் அறையில் தனியாக பேசியது என்ன –  நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக திவ்யதர்ஷினியிடம் புகார்  மனு அளித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது.இதில் திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகள் ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணிக்கைகாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு தபால் வாக்குகான வாக்கு பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அனைத்து வேட்பாளர்கள், முகவர்களுக்கான விதிமுறை குறித்த கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்கு பின்னர் கிழக்குத் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன், தேர்தல் நடத்தும் அலுவலருடன்  தபால் வாக்குப் பெட்டி உள்ள அறையில் சுமார் 25 நிமிடம் தனியாக பேசி உள்ளார். அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக ஊழியரை யாரும் உள்ளே வர வேண்டாம் என கூறிவிட்டு சென்றுள்ளார். எனவே தேர்தல் நடத்தும் அலுவலரும் வேட்பாளர் வெல்ல மண்டி நடராஜனும் உள்ளே என்ன பேசிக் கொண்டிருந்தனர். 

ALSO READ  நாளை முதல் உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் :


நடைபெற்ற கூட்டத்தில்  பல்வேறு விபரங்கள் கொடுத்த பின்னர் இவர்கள் தனியாக பேச காரணம் என்ன…? மேலும் அவர்கள் பேசுகிற அறையில்  தபால் வாக்குகான பெட்டிகள் இருக்கிறது. எனவே அவர்கள் உள்ளே தனிமையில் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, தேர்தல் அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு என்ன பேசப்பட்டது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான  திவ்யதர்ஷினி இடம்கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ்  மனு அளித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியரசு தின அணிவகுப்பு… தமிழக ஊர்தி நிராகரிப்பு

naveen santhakumar

அமமுக செயற்குழு மற்றும் பொதுக்கூட்டம் தொடர்பாக டி.டி.வி தினகரன் அறிக்கை !

News Editor

போலீசார் அனுமதி மறுத்ததால் ஸ்கூட்டரில் சென்ற பிரியங்கா காந்தி

Admin