அரசியல்

பாஜக கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

கோவை மாவட்டம் மேட்டுபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக நிர்வாகி கல்யாணராமன் நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்தினார்கள்.

ALSO READ  பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்தார்.  

இதனைத்தொடர்ந்து அப்போதைய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு பரிந்துரையின் பேரில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ராசாமணி வெளியிட்ட உத்தரவின் பேரில் பாஜகாவைச் சேர்ந்த கல்யாண்ராமன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கல்யாணராமனின் மனைவி சாந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் கல்யாணராமன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தவிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வெளியாகிறது திமுகவின் வேட்பாளர் பட்டியல்; கவலையில் தொண்டர்கள் !

News Editor

திமுகவின் முன்னாள் அமைச்சர் அதிமுகவில் இணைந்தார் !

News Editor

அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து ‘அவசர அவசரமாக’ வெளியேறிய வானதி… பரபரப்பு பேட்டி!

naveen santhakumar