அரசியல்

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் இன்று வெளியீடு! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் அரசியல் காட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து வருகிறது. அந்த வகையில் திமுக கட்சி தங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டு தொகுதி பங்கீடு கையெழுத்தானது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 187 தொகுதிகளில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் திமுக வேட்பாளர்கள் 174 பேரும், கூட்டணி கட்சி சார்பாக 14 பேரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளனர். 


திமுகவில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட், இந்திய கமியூனிஸ்ட், விசிக, மதிமுக, ஆகிய கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

ALSO READ  தேர்தல் முடிவுகள்; முன்னிலை வகிக்கும் திமுக...அப்செட்டில் அதிமுக ..!

மனித நேய மக்கள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒரு தொகுதியில் தனி சின்னத்திலும் மற்றோரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது. இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சி தனி சின்னத்தில் போட்டியிடுகிறது.

கொங்குநாடு தேசிய மக்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை ஆகியவற்றிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.  

ALSO READ  விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினரும் போராட்டம்:


திமுகவின் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்பதனை இன்று மாலை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவிக்கவுள்ளார்.

#TNelection #tamilnadu #Tamilthisai #admk #dmk #DMKalliance #congress #tamilnaducongress #vck #mdmdk #mkstalin #IUML #MNMK


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அகில இந்திய அளவில் முதல் பரிசு வாங்கிய ஜெயலலிதா புகைப்படம்..

News Editor

தடை இருந்தும் எளிதாக ஆசிட் வாங்க முடிகிறது : தெரிக்கவிட்ட தீபிகா

Admin

“அதிமுகவில் ஸ்லீப்பர் செல் இல்லை ஆனால் எட்டப்பன் இருக்கிறார்கள்”; அமைச்சர் ஜெயக்குமார்

News Editor