அரசியல்

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பின்னடைவு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம், அசாம், மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

ALSO READ  புயல் பாதிப்புகளை பார்வையிட கடலூர் புறப்படுகிறார் தமிழக முதல்வர்:

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 99 சட்டமன்ற தொகுதிகளிலும்  ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 130 சட்டமன்ற தொகுதிகளிலும், கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நேரம் வரை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும், தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் கட்சியும் எந்த தொகுதிகளிலும் முன்னிலையில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி காலமானார் :

இதில் காட்பாடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.ராமு 6,918 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் 5,609 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியுங்கள், நீதிமன்றத்தில் சோனியா மருமகன் முறையீடு

Admin

சசிகலா இணைப்பு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி !

News Editor

நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பாக்கல

Admin