அரசியல்

சர்ச்சை வழக்கில் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன்… எழும்பூர் நீதிமன்றம் ஆணை!

Maridhas
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

யூ-டியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த யூடியூபர் மாரிதாஸ். முப்படைத் தளபதி பிவின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்ததை தொடர்பாக ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டதாக இவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது.

அதற்கு முன்னதாக தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் குறித்து போலி மின்னஞ்சல் அனுப்பியதாக சென்னை கமிஷனர் அலுவலத்தில் அளிக்கப்பட்ட புகாரிலும், கொரோனா முதல் அலை பரவலின் போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகாரிக்க ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என வீடியோ வெளியிட்டதாக மேலப்பாளையம் போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

ALSO READ  கொரோனா லாக்டவுனில் குடும்பமே சேர்ந்து செய்த காரியம்!

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி குறித்து அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மாரிதாஸ் தொடர்ந்த வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், மாரிதாஸ் தினமும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அப்பாவின் கனவை நிறைவேற்ற குமரியில் விருப்பமனு தாக்கல் !

News Editor

‘மூன்றாவது அணி உருவாக வாய்ப்புள்ளது’; சமத்துவக்கட்சி சரத்குமார்!  

News Editor

தொடங்கியது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல்?

Shanthi