அரசியல்

இனி No தில்லுமுல்லு.. தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி முடிவு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆவின், போக்குவரத்துக் கழக காலிப்பணியிடங்கள் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் என்ற மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் பணியிடங்களை நிரப்புவதில் 3 கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி செய்த வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
திமுக தேர்தல் அறிக்கையில் அரசு பணியிடங்களை நிரப்புவதில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அரசு பணியிடங்களை நிரப்புவதில் ஏற்பட்டு வந்த முறைகேடுகளை களையும் விதமாக, இனி பொதுத்துறை நிறுவன பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நிரப்ப வழி வகை செய்யும் சட்ட மசோதாவை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

ALSO READ  சென்னை மாநகராட்சி தேர்தல் - மேயர் வேட்பாளர் கனிமொழி ?

இதன் மூலம் அரசு பொதுத்துறை நிறுவனங்களான மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், ஆவின், போக்குவரத்து கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் பணி நியமனங்கள் இனி டிஎன்பிஎஸ்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது. மேலும் அரசுக்கழகங்கள், சட்டப்பூர்வமான வாரியங்கள், மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அதிகாரப்பூர்வ அமைப்புகளுக்கு ஆள் சேர்க்கைக்கான பணிகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் கவனித்துக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லி முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்

Admin

ஊழலில் முதல்வரை முந்திவிட்டார் எஸ் பி வேலுமணி  : ஸ்டாலின் விமர்சனம் 

News Editor

டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகத்தில் புகுந்து பாமகவினர் அத்துமீறல்

Admin