அரசியல் தமிழகம்

என்.ஆர்.சி.யை தமிழகத்தில் கொண்டு வந்தால் அ.தி.முக. எதிர்க்கும் -அமைச்சர் உதயகுமார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் என்.ஆர்.சி.யை கொண்டுவந்தால் முதல் குரலாக அ.தி.மு.க எதிர்க்கும் என்று அமைச்சர் உதயகுமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது.

தமிழகத்தில் என்.ஆர்.சி.யை கொண்டு வந்தால் அ.தி.முக. எதிர்க்கும் -அமைச்சர் உதயகுமார்

சட்டசபையில் மு.க.ஸ்டாலின், சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதாக கூறும் அதிமுக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அதிமுகவால் ஒரு சிறுபான்மையினராவது பாதிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்ட முடியுமா என அமைச்சர் உதயகுமார் கேட்டார். துரைமுருகன் பேசும்போது, குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை, திருத்தத்தையே எதிர்க்கிறோம் என கூறினார். அதன்பின் அமைச்சர் உதயகுமார் பேசும்போது, ‘அசாமை தவிர வேறுஎந்த மாநிலத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வில்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்த நினைத்தால் முதல் குரலாக அதிமுக எதிர்க்கும்’ என்றார்.


Share
ALSO READ  எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் மருத்துவமனையில் அனுமதி - காரணம் என்ன ?
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு :

Shobika

“இது மரணம் இல்லை, கொலை”: பிரியா பவானி சங்கரின் காட்டமான பதிவு… 

naveen santhakumar

டெல்லி முதல்வராக பதவியேற்றார் கெஜ்ரிவால்

Admin