அரசியல் இந்தியா

காங்கிரசிலிருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா- ம.பி.ல் கவிழுமா காங்கிரஸ்…???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய பிரதேசத்தின் கமல்நாத் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் அதிருப்தி MLAக்கள் 19 பேர் (சிந்தியா ஆதரவாளர்கள்) பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் ரகசியமாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையடுத்து மத்திய பிரதேசத்தில் சில அமைச்சர்களை பதவிகளை ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு பதவி வழங்க தலைமை முன்வந்தது. இதற்காக அம்மாநிலத்தில் 19 அமைச்சர்கள் பதவி விலகினர். 

இதைத்தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசியதாக காங்கிரஸ் MP ராவத் தெரிவித்தார். 

இத்தகைய பரபரப்பான சூழலில் ஜோதிராதித்ய சிந்தியா வீட்டிலிருந்து கிளம்பினார். அவர் எங்கு செல்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. 

அவர் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்திக்க செல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அப்போது உடன் இருந்தார். இதனால் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிகிறது. 

ALSO READ  ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை !
Courtesy ANI

இதனால்  ம.பி.-ல் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு இன்று அனுப்பி வைத்தார்.

ஜோதிராதித்ய சிந்திய தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

ALSO READ  24 மருந்துக்களின் மீதான ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா...

கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினராக இருந்து வருகிறேன். நாட்டுக்கும் எனது மாநில மக்களுக்கும் பணியாற்ற விருப்புகிறேன் ஆனால் காங்கிரஸில் இருந்தால் முடியாது. முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் புதிய தொடக்கம் அவசியம். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகிறேன் எனக் கூறியுள்ளார். இந்த நாட்டுக்கு சேவை செய்ய பாதை அமைத்து தந்தமைக்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

இதனிடையே கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியாவை காங்கிரஸில் இருந்து நீக்குவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Azərbaycanda onlayn kazino Pin Up Pin Up slot maşınlar

Shobika

வங்கிகளில் NEFT,RTGS,IMPS.. என்ன வித்தியாசம் தெரியுமா?

News Editor

பத்ம பூஷனுக்குப் பிறகு, டோக்கியோ தங்கத்தை வெல்லும் பொறுப்பு : பி.வி.சிந்து

Admin