அரசியல் இந்தியா

பஞ்சாபில் நெருங்கும் தேர்தல் முதல்வருக்கு எதிராக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போர்க்கொடி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளநிலையில், முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக 4 அமைச்சர்கள் மற்றும் 28 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து அணிக்கும், முதலமைச்சர் அமரீந்தர் சிங் அணிக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், சண்டிகரில் அமைச்சர் திரிப்த் ரஜிந்தர் சிங் பஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா , சுக்ஜிந்தர் சிங் ரன்தவா மற்றும் சரண்ஜித் சிங் மற்றும் 28 எம்எல்ஏக்கள், பாஜ்வாவின் இல்லத்தில் கூடி திடீர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ALSO READ  தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புரா நியமனம்

மேலும் இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைமையை நேரில் சந்தித்து, முதலமைச்சர் அமரீந்தர் சிங்கை நீக்குமாறு வலியுறுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Punjab: CM Captain Amarinder Singh-Navjot Singh Sidhu tussle makes it a  difficult call for Congress | Chandigarh News - Times of India

அமரீந்தர் சிங், தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதால், வரும் தேர்தலில் சிக்கல் வரும் என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  தேர்தல் செலவுக்கு மக்களிடம் பணம் வசூல்….மக்கள் நீதி மய்யம்…..

இதற்கிடையே கட்சியின் ஆலோசகர்கள் இருவர் பாகிஸ்தான் ஆதரவு கருத்துகள் தெரிவித்ததால், மாநில காங்கிரஸ் தலைவர் சித்துவுக்கு எதிராக, அமரீந்தர் சிங் ஆதரவாளர்கள் குரலெழுப்பிவருகிறார்கள்.

சட்டமன்றத்தேர்தல் நெருங்கிவரும் சூழலில் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள மோதல் பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பெங்களுர்-சென்னை AC டபுள் டெக்கர் ரயில் சேவை தொடக்கம்:

naveen santhakumar

கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தது ம.நீ.ம !

News Editor

கதறவைக்கும் தக்காளி விலை! பொதுமக்கள் கண்ணீர்..

Shanthi