அரசியல்

ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் மே 2 ஆம் தேதி  எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

ALSO READ  டி.டி.வி.தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது; முதல்வர் பேச்சு !

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  மாலை 06.00 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படவுள்ளார்.

அதனையடுத்து நாளை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அரச குடும்பத்தின் கௌரவத்தை இழிவுபடுத்திவிட்டாள் என் மகள் : மேகனின் தந்தை குற்றச்சாட்டு

Admin

தபால் வாக்குப்பெட்டி இருக்கும் அறையில் அதிமுக அமைச்சர்; 25 நிமிடம் நடந்தது என்ன..?

News Editor