அரசியல்

ஓ.பி.எஸ்-இ.பி.எஸ்.நேரடி மோதல்; மீண்டும் கூடிய எம்.எல்.ஏக்கள் கூட்டம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதி பெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் கட்சி பொறுப்பில் இருந்த அதிமுக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 69 தொகுதிகளில் வெற்றி பெற்று தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளன. 

இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் யார் என்று தேர்ந்தெடுக்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. பின்னர் அந்த கூட்டத்தில், யார் எதிர்க்கட்சி தலைவர் என்று தேர்ந்தெடுப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. மேலும் முடிவுகள் எட்டப்படமால் அந்த கூட்டம் நிறைவு பெற்றது. 

ALSO READ  தமிழக முதல்வர் குழந்தைக்கு 'ராமச்சந்திரன்' என பெயர் வைத்தார் 

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் நடைபெற்று வருகிறது. நாளை சட்டமன்ற கூடவுள்ளதால் இன்று எதிர்க்கட்சி தலைவர் யார் என்று தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்நிலையில் இந்த கூட்டமானது அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர், கொறடா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கூட்டத்தில்  ஓபிஎஸ், இபிஎஸ், வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன் கே.பி.முனுசாமி, வளர்மதி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

ALSO READ  எல்.முருகனுக்கு மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!!

இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அண்ணாமலைக்கு போட்டியாக களம் இறங்குகிறாரா??? சசிகாந்த்:

naveen santhakumar

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமையும்; ஜான் பாண்டியன் நம்பிக்கை!

News Editor

திடீர் அறிவிப்பு…தமிழக அமைச்சர்களின் 3 முக்கிய துறைகள் மாற்றம்!

naveen santhakumar