அரசியல் இந்தியா

5வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாஜக, எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கிய போது அதானி குழும முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், இந்தியாவை அவமானப்படுத்திய விவகாரத்தில் ராகுல் காந்தி அவையில் மன்னிப்பு கோர வேண்டும் என ஆளும் பாஜகவும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி வருகின்றன. இதனால், கடந்த 13, 14, 15, 16ஆம் தேதிகளில் மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின.

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியபோது இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க கோரி ஆளும் கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். பதிலுக்கு அதானி குழும முறைகேடு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். எதிர்க்கட்சிகள், ஆளும் பாஜக அமளி காரணமாக இரு அவைகளும் வரும் திங்கள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி காரணமாக தொடர்ந்து 5வது நாளாக அவை நடவடிக்கைகள் முடங்கின.


Share
ALSO READ  டெல்லியை கைப்பற்ற போவது யார்…சட்டசபை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் ஆனந்த் மஹிந்திரா-வின் ட்விட்டர் பதிவு…

naveen santhakumar

அமைச்சரவையில் பங்கு கேட்பீர்களா? பாஜக மாநில தலைவர் பதில்..! 

News Editor

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனம் ஸ்டார்லிங்க் சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் இந்தியாவில் தொடக்கம்

News Editor