அரசியல் தமிழகம்

ஸ்டாலினை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் அதிரடி கைது..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தஞ்சாவூர்:

திருவிடைமருதூர் அருகேன் ஆடுதுறை அடுத்த மருத்துவ குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். இவர் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக உள்ளார்.

சொந்த கட்சிக்காரரை போட்டுத்தள்ள பணம் கொடுத்த பா.ம.க நிர்வாகி: 4 பேரை கைது  செய்த போலிஸ்!
வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலின்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ம.க.ஸ்டாலினை மர்ம கும்பல் கொலை செய்வதற்காக வந்தபோது போலீசார் அந்த கும்பலை பிடித்தனர்.

இந்த கொலை திட்டத்துக்கு, தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி லாலி மணிகண்டனை போலீசார் கடந்த 24 நம் தேதி திருவிடைமருதூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

போலீசாரிடம், ம.க.ஸ்டாலினை கொலை செய்வதற்கு பாமக மாநில துணை செயலாளரும், கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன்(42) உடந்தையாக இருந்ததாக லாலி மணிகண்டன் கூறினார்.

ALSO READ  பலதுறைகளில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்
வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலினை கொலை செய்ய திட்டம் பா.ம.க. மாநில  துணை செயலாளர் கைது | The plan to assassinate Vanniyar Sangam state  vice-president Stalin was ...
பாமக மாநில துணை பொதுச் செயலாளர் வெங்கட்ராமன்

இதனையடுத்து திருவிடைமருதூர் போலீசார் வெங்கட்ராமன் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

வன்னியர் சங்க மாநில துணைத் தலைவரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஆன்லைனில் தானா?????

naveen santhakumar

முருகேசன் – கண்ணகி ஆணவக்கொலை வழக்கில் டிஎஸ்பி செல்லமுத்து இன்ஸ்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்பட 13 பேர் குற்றவாளிகள் – கடலூர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

News Editor

குரூப் 1 தேர்வுக்கு ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பம்!

Admin