அரசியல்

மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து திடீர் ராஜினாமா

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து இன்று திடீரென பதவி விலகி உள்ளார்.

Breaking News: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்  சித்து

பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங்குக்கும், அவரது மந்திரிசபையில் இடம் பெற்றிருந்து, பின்னர் பதவி விலகிய முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வந்தது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சமீபத்தில் அமரிந்தர் சிங்கின் எதிர்ப்பையும் மீறி சித்து மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். இது அமரிந்தர் சிங் அவமானமாக கருதினார். இதனால் அவருக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையானது.

ALSO READ  தமிழகத்திற்கு ஒரு மத்திய அமைச்சர் கிடைத்திருக்கிறார் என்று மகிழ முடியவில்லை - கமல்ஹாசன்

இதை தொடர்ந்து தந்து பதவியை அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்தது சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார்.

SAD urges Charanjit Singh Channi to not let Navjot Sidhu treat him like  'rubber stamp' | India News | Zee News

நவ்ஜோத் சிங் சித்துவுடனான கடுமையான மோதலைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, கேப்டன் அமரிந்தர் சிங் இன்று திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். அங்கு அவர் பா.ஜ.க தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்லதாக கூறப்பட்டது.

ALSO READ  வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள மையத்தை பார்வையிட்ட பாஜகவினர் !

ஆனால் இந்த நிலையில் திடீர் திருப்பமாக நவ்ஜோத்சிங் சித்து தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பி வைத்து உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டெல்லியில் ஆட்சியை பிடிக்க தயாராகும் ஆம் ஆத்மி கட்சி…

Admin

பாக். இராணுவத்தின் மனித உரிமைமீறல்களை விமர்சித்த PTM தலைவர் கைது

Admin

பாஜகவில் இணையும் நடிகர் சிவாஜியின் மகன் !

News Editor