அரசியல்

“நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது” ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்டாலின் பதில் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. அதில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

ALSO READ  வலியால் துடித்த கர்ப்பிணிக்கு வழியிலேயே பிறந்த குழந்தை !

இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் வரும் 7 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் திரை பிரபலங்கள் வரை வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  "அதிமுகவில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது"; விஜயபிரபாகரன் பேட்டி!

இதனை  ரீட்வீட் செய்த மு.க ஸ்டாலின், “இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்” என பதிலளித்துள்ளார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவுக்கு  முரசு சின்னம் ஒதுக்கீடு !

News Editor

பாஜக-வில் இணைந்த வீரப்பன் மகள்… என்ன லட்சியம் தெரியுமா?

Admin

அன்று’ஹேராம்’ பேசிய கதைக்கரு உண்மையாகி வருவதில் வருத்தமே- கமல்

naveen santhakumar