அரசியல் தமிழகம்

யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே- இது அடக்கமுடியாத யானை- இபிஎஸ்- ஸ்டாலின் காரசாரம்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி ளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அப்போது கொரோனாவை கட்டுப்படுத்தியதில் அதிமுக சிறப்பாகச் செயல்பட்டதாகவும், தற்போது திமுக அரசு அவ்வாறு செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விஷயங்களை ஏன் நிறைவேற்றவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

ALSO READ  காஷ்மீரில் இருந்து 7000 பாதுகாப்பு படையினர் வாபஸ் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இறுதியாக, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த வாக்குறுதிகளும், புதிய திட்டங்களும் ஏதும் இல்லை.

Have taken up fishers' rescue with Centre: Edappadi K Palaniswami

யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே என்பார்கள்; ஆனால் ஆளுநா் உரையில் யானையும் இல்லை மணியோசையும் இல்லை; வெறும் வெற்று அறிக்கையாக உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் திமுக யாருக்கும் அடங்கிய யானை இல்லை; யாராலும் அடக்கமுடியாத யானை; அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை.

ALSO READ  சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்துள்ளோம் - மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
உள்ளாட்சித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்தாததால் தமிழகத்துக்கான செயலாக்க நிதி  கிடைக்கவில்லை: ஸ்டாலின் பேச்சு | Stalin's assembly speech Tamil nadu local  body ...

யானைக்கு 4 கால்கள் தான் பலம். அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிப்பற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம் என்று பதிலளித்தார்.

மேலும், ஆளுநர் உரை டிரெய்லர் தான் எனவும் அரசின் ஐந்தாண்டு திட்டங்கள், கொள்கைகள், நோக்கங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது எனவும் குறிப்பிட்டார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீண்ட நாட்கள் கெடாத பால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மோர்: ஆவினின் 5 புதிய அசத்தல் பொருட்கள் அறிமுகம்!! 

naveen santhakumar

அசத்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் மகள்… வைரலாகும் வீடியோ..!

naveen santhakumar

நூறு நாள் வேலைத்திட்டம்: நாட்கள் மற்றும் ஊதியம் உயர்வு!

naveen santhakumar