அரசியல்

தமிழகத்தின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுவார்; திருநாவுக்கரசர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையை வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதனையடுத்து அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அந்தவகையில் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசுர் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களின் பேராதரவோடு முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க வந்தோம். அறந்தாங்கி தொகுதியில் 31ஆயிரம் வாக்கு வித்யாசத்தில்  ராமசந்திரனை வெற்றி பெற வைத்தற்கு வாழ்த்துக்கள் பெற அவரும் உடன் வந்துள்ளார்.

ALSO READ  அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசு அரசிதழில்

தமிழகத்தின் சிறந்த முதல்வராக ஸ்டாலின் செயல்படுவார். பல்வேறு பொறுப்புக்களில் இருந்த ஸ்டாலின்,  ஆட்சியில் சிறந்த அனுபவம் கொண்டவர். அதனால் தமிழகத்தை சிறந்த முதல்வராக வழிநடத்துவார். பின் தங்கி உள்ள தமிழகத்தை முன்னேற்றம் அடைய செய்வார்” எனக் கூறினார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை; அ.ராசா விளக்கம் !

News Editor

எனக்கு 10 கோடி விலை பேசினார்கள்; சினேகன் பேட்டி !

News Editor

முன்னாள் எம்.பி. கொரோனாவுக்கு பலி… சோகத்தில் மூழ்கிய காங்கிரஸ்!

naveen santhakumar