அரசியல்

தற்போதைய நிலவரம்; வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 78 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 156 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து  வந்த நிலையில் தற்போது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் சில தொகுதிகளில் வாக்கு என்ணிக்கை நிறைவு பெற்று வெற்றி வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் பேராவூரணி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் விட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் அசோக் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

ALSO READ  மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிகளில் திமுக சார்பாக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலியை விட 50 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.  திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார்.

திருச்செந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். எழும்பூரில் திமுக வேட்பாளர் பரந்தாமன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜான்பாண்டியனை விட 39,485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

ALSO READ  நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் தடை...????

திருத்துறைப்பூண்டியில் அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமாரை 30,058 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளார். கீழ்பென்னாத்தூரில் தொகுதியில்  திமுக வேட்பாளர் கு.பிச்சாண்டி  பாமக வேட்பாளர் செல்வகுமாரை விட 26,800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

இதனையடுத்து குடியாத்தம் தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்ட அமலு வெற்றி பெற்றுள்ளார். குன்னூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றிபெற்றுள்ளார். பரமக்குடி தொகுதியில் போட்டியிட்ட  திமுக வேட்பாளர் முருகேசன் வெற்றி பெற்றார். 14,376 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5, 8-ம் வகுப்புகளுக்கானபொதுத்தேர்வுகள் ரத்து – தமிழக அரசு உத்தரவு

Admin

#Breaking தரமற்ற பொங்கல் பரிசு தொகுப்பு… முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

naveen santhakumar

எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்? – அதிமுகவுக்கு ஷாக் தந்த கல்வெட்டு

naveen santhakumar