அரசியல்

முதல்வர் ஸ்டாலினின் முதல் 5 கையெழுத்து !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக 159 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிபெரும்பான்மையில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க ஸ்டாலின் நாளை ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.  

சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று அங்கு உள்ள முதல்வர் இருக்கையில் அமர்ந்து தனது பணியை தொடங்கினர். அதனையடுத்து முதல் முறையாக பணியை தொடங்கிய மு.க ஸ்டாலின் 5 புதிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில்…

1.தேர்தலுக்கு முன்பு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிதியாக ஒரு குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய் நிவாரணமாக கொடுப்போம் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில் தற்போது அதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுள்ளார்.  முதல் தவணையாக ரூ. 2000 வீதம் மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.

ALSO READ  உலக சுகாதார அமைப்பின் விஞானிகள் குழு சீனாவிற்குள் நுழைய தடை..! ஜி ஜின்பிங் அதிரடி 

2.ஆவின் பால் லிட்டருக்கு 3 ருபாய் குறைத்து அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த அரசனை மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

3.சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் செய்வதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ALSO READ  உளுந்தூர்பேட்டை அருகே திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்க நிலம் ஒதுக்கீடு - முதலமைச்சர் எடப்பாடி

4. புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு அடங்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

5.தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை அரசே ஏற்கும் கோப்பில் கையெழுத்திட்டார். இது மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே ஏற்கும் என தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நடிகர் ரஜினிகாந்த்க்கு தொலைபேசியின் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் – ஸ்டாலின் 

News Editor

பிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்

Admin

கடம்பூர் ராஜுவை எதிர்த்து தினகரன் போட்டி; இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அமமுக !

News Editor