அரசியல்

பாஜகவிற்கு மரண அடி கொடுத்த மக்கள்; திருமாவளவன் பேச்சு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் சிந்தனைச்செல்வன், நாகப்பட்டினம் தொகுதியில் ஆளூர் ஷாநவாஸ், திருப்போரூர் தொகுதியில் எஸ். எஸ். பாலாஜி, செய்யூர் தொகுதியில் பனையூர் பாபு ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து விசிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 4 சட்டமன்ற உறுப்பினர்களும் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை  சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், “5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவின் சதிவேலைகள் மேற்கு வங்கம், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் எடுபடவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் மதவாத வெறுப்பு அரசியலுக்கு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர். மேற்கு வங்கத்தில் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்ட பாரதிய ஜனதா படுதோல்வி அடைந்திருக்கிறது.

ALSO READ  உலகில் 10.54 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு !

தமிழ்நாட்டில் அதிமுக பாமக முதுகில் ஏறி சவாரி செய்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று கணக்கு போட்ட பாரதிய ஜனதா படு தோல்வியைச் சந்தித்திருக்கிறது. தமிழ்நாடு பெரியார் மண் சமூக நீதி மண்  என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழ்நாட்டில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 நாள் இடைவெளியில் ஒரு சின்னத்தை முன்னெடுத்து 4 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது.


விடுதலை சிறுத்தைகள் கட்சியை  ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துக்குள் ஒடுக்கிவிட நினைத்த மதவாத சாதியவாத சக்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விசிக 2 பொதுத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பொது மக்களின் நன்மதிப்பை பெற்ற கட்சி என்ற நற்பெயரை விடுதலை சிறுத்தைகள் கட்சி வாங்கியிருக்கிறது.

ALSO READ  ராஜ்யசபா கனிமொழி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் திமுக வேட்பாளர்களாக அறிவிப்பு...

கலைஞரை போலவே அரசியலில் இராஜதந்திரம் படைத்தவர் மு க ஸ்டாலின். நல்லாட்சியை தரும் வல்லமை படைத்தவர் திமுக தலைவர் ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்லாட்சி தொடர விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் போல் துணை நிற்கும். அதிமுகவும் பாஜகவும் வேறு வேறு அல்ல அவர்கள் ஒரே கோட்டில் பயணம் செய்பவர்கள் தான். அதனால் தான் மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டினார்கள் எனக் கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழகத்தில் தான் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

Shanthi

முதல் முறையாக பெண் ஒருவர் எம்.எல்.ஏவாக தேர்வு!

Shanthi

ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மு.க ஸ்டாலின் !

News Editor