அரசியல்

‘பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது’ – பாஜக…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று கூறிய திக்விஜய்சிங்குக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

फिर विवादों में घिरे दिग्विजय सिंह, पाकिस्तानी पत्रकार से Article 370 को  लेकर कही ऐसी बात, BJP हुई हमलावर Digvijay Singh controversies Clubhouse  Chat with Pakistani journalist ...

காணொலி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உரையாடினார்.

அதில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திக்விஜய் சிங்கின் உரையாடலுக்கு இந்த பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

ALSO READ  பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி!
Article-370

இதுகுறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறும்போது,

“பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது,

மும்பை தாக்குதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சதி என்று குற்றம்சாட்டினர். பாகிஸ்தானுக்கு நற்சான்றிதழ் வழங்குவதை திக்விஜய் சிங் வழக்கமாக வைத்திருக்கிறார். இவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ  இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் புகார்- நிராகரித்த மாலத்தீவு...

கர்நாடக பாஜக செயதித்தொடர்பாளர் கணேஷ் கார்னிக் கூறுகையில்,

நமது நாட்டின் பெருமையை சீர்குலைப்பது, உலக அரங்கில் பிரதமரின் கவுரவத்தை பாழாக்குவது தான் காங்கிரசின் நோக்கம்.

திக்விஜய்சிங் கருத்து மூலம், அக்கட்சி சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பது உறுதியாகியுள்ளது. அதனால் காங்கிரஸ் தனது பெயரை மாற்றிக்கொள்வது நல்லது’ என்று தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் விஜயபாஸ்கர் உருக்கமான கடிதம்..!!!!

naveen santhakumar

79 வயதாகும் மூதாட்டி வீரம்மாள் அழகப்பன் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி

Admin

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்?

Shanthi