அரசியல்

முதல்வர் தாய் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; அ.ராசாவுக்கு வலுக்கும் கண்டனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது.  

அந்தவகையில் திமுக சார்பாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை என்று கூறினார்.

இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பல தலைவர்கள் அ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில் திமுகவின் நாடாளுமன்ற எம்.பி.கனிமொழி அ.ராசாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ALSO READ  ஜம்மு-காஷ்மீரின் முதல் IAS அதிகாரி பொது பாதுகாப்புச் சட்டத்தில் கைது.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லாருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இதுதான் திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூக நீதி” என குறிப்பிட்டுள்ளார்,

#tamilnadu #TNelection #Kanimozhi #raja #DMK #ADMk #EdappadiPalanisamy #DMKpropaganda #TamilTHisai #PoliticalUpdate


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்க செய்தியாளர்கள் புத்தகத்தில் அதிபர் டிரம்ப் குறித்துஅதிர வைக்கும் தகவல்கள்

Admin

கொரோனாவுடன் வாழ்வதற்கு பழகிவிட்ட அமைச்சர்……யார் அந்த அமைச்சர்?????

naveen santhakumar

கன்னியாகுமரி இடைத்தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் போட்டி..!

News Editor