அரசியல்

தமிழர்களின் உரிமைகளை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டார் முதல்வர்;உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலும் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதனையடுத்து அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை, பிரச்சாரம், வாக்கு சேகரிப்பு என தீவிரமாக இயங்கி வருகிறது. அந்தவகையில் திமுக சார்பாக ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிவேந்தனை ஆதரித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது பேசிய உதயநிதி,  “மோடி அரசு 15 லட்சம் ரூபாய் வங்கியில் செலுத்துவதாகக் கூறியது ஆனால் அதைச் செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு கட்டியது ஒரே ஒரு செங்கல்தான், அதையும் நான் எடுத்து வந்துவிட்டேன். தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் மோடியிடம் அடமானம் வைத்து விட்டார் எடப்பாடி. ராசிபுரம் மக்கள் பெரிதும் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது.

புறவழிச்சாலை திட்டம் கடந்த 10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. பொள்ளாச்சியில் 200 பெண்களை பாலியல் கொடுமை செய்து மிரட்டி பணம் பறித்தது அதிமுக நிர்வாகிகள்தான் . ஜெயலலிதா இறந்தது குறித்து இதுவரை உண்மை தெரியவில்லை. திமுக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும்.’ என்று கூறினார்.

ALSO READ  கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

#DMK #ADMK #PMK #BJP #Tamilnadu #TNelection #TamilThisai #PoliticalUpdate #UthayanithiStalin #Edappadipalanisamy #TNcm #Tamilnadugovt


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருடன் தமிழ்நாடு முதல்வர் சந்திப்பு..

Shanthi

கோவை வால்பாறை தொகுதியில் அதிமுக வெற்றி !

News Editor

பிப்ரவரி 16-ல் டெல்லியில் புதிய அமைச்சரவை பதவியேற்பு?

Admin