விளையாட்டு

இனி தோனி இல்லை: ஹர்பஜன் சிங்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்தில் எம்.எஸ்.தோனி பெயர் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ்.தோனி. மூன்று விதமான உலக கோப்பைகள், அந்நிய மண்ணில் வெற்றிகள் என அவர் படைத்த சாதனைகள் ஏராளம்.

2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டிக்கு பிறகு அவர் இதுவரை இந்திய அணி விளையாடும் தொடரில் இடம் பெறவில்லை. இதனால் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை என்ன ஆனது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

ALSO READ  சேலத்தில் ஐபிஎல்: தோனி பங்கேற்பது உறுதி

இதற்கிடையில் பிசிசிஐ வெளியிட்ட 2020 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்த பட்டியலில் எம்எஸ் தோனி பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும், விரைவில் அவர் தனது ஓய்வை அறிவிப்பார் என தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தோனி பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி தான் தோனி விளையாடிய கடைசி போட்டியாக இருக்கும் எனவும், அணியில் இடம் பிடிக்காததற்கான அதற்கான காரணத்தையும், அதனை ஏற்றுக் கொள்கின்ற மனநிலையும் அவரிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஹர்பஜன் சிங் கடந்த இரண்டு ஆண்டுகளாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஸ்பெயினில் இளம் கால்பந்து பயிற்சியாளர் 21 வயதில் கொரோனாவால் பலியான பரிதாபம்….

naveen santhakumar

ஓய்வு பெறும் நாளில் வேகப்பந்து வீச்சாளருக்கு நேர்ந்த சோகம்

Admin

ஐசிசி தரவரிசை பட்டியலை கடுமையாக விமர்சித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன்

Admin