விளையாட்டு

உடற்தகுதி தேர்வில் தோல்வி…. சட்டையை கழற்றிய பாகிஸ்தான் வீரர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடற்தகுதி தேர்வில் பாகிஸ்தானின் உமர் அக்மல் தோல்வியடைந்ததால், கோபத்தில் ஜெர்சியை கழற்றி எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களும் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை கட்டாயம் ஆக்கியுள்ளது.

இதற்கிடையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும் , விக்கெட் கீப்பராகவும் இருந்த உமர் அக்மல் ஒழுங்கீன பிரச்சனை, உடற்தகுதி தோல்வியால் சர்வதேச அணியில் விளையாட முடியாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

ALSO READ  நடுவர்கள் தவறான முடிவு; விராத் கோஹ்லி டக்-அவுட் - ரசிகர்கள் கொந்தளிப்பு !

இதனால் உள்ளூர் போட்டிகளில் விளையாட உடற்தகுதியை நிரூபிக்க தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்றார். அங்கு சில தேர்வுகளில் அவர் தோல்வியடைந்தார்.

அதனால் அங்கிருந்த டிரைனரிடம் ஜெர்சியை கழற்றி என் உடம்பில் கொழுப்பு எங்கே இருக்கிறது? என ஆவேசமாக கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மீண்டும் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட உமர் அக்மல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று – 3 பேர் கட்டாயத் தனிமை

News Editor

கௌசல்யாவிடம் ரூ.1 கோடிக்காக கேட்கப்பட்ட கேள்வி என்ன தெரியுமா?

Admin

ஜடேஜா விளையாடுவதை விரும்பவில்லை… உண்மையை சொன்ன முன்னாள் வீரர்

Admin