விளையாட்டு

தொடரை வென்றது இந்தியா : ரோஹித் சர்மா, விராட் கோலி அதிரடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. டாஸ்வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் குவித்தது.

பின்னர் 287 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக, ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர். ராகுல் 19 ரன் எடுத்திருந்த நிலையில், அஸ்டான் அகர் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அதனையடுத்து, ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மா, விராட் கோலி இணை ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சைத் துவம்சம் செய்தனர்.

ரோஹித் சர்மா, விராட் கோலி அதிரடி: தொடரை வென்றது இந்திய அணி

அதிரடியாக ஆடிய ரோஹித் சதத்தைக் கடந்தார். தொடரந்த ரோஹித், ஆறு சிக்சர் 8 பவுண்டரிகளுடன் 128 பந்துகளில் 119 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா அடம் சாம்பா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

ALSO READ  முதல் டெஸ்டில் சொதப்பிய இந்தியா … அபார வெற்றி பெற்ற நியூசிலாந்து

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியல்
சச்சின் (இந்தியா) – 49 சதங்கள்
விராட் கோலி (இந்தியா) – 43 சதங்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸி) – 30 சதங்கள்
ரோஹித் ஷர்மா (இந்தியா) – 29 சதங்கள்
சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 28 சதங்கள்
ஹசிம் ஆம்லா (தென் ஆப்ரிக்கா) – 27 சதங்கள்

ALSO READ  ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன தென் ஆப்பிரிக்க வீரர்.! 

பின்னர், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடியும் அதிரடியாக ரன்களைக் குவித்தது. நிதானமாக ஆடிய கோலியும் அரைசதத்தைக் கடந்தார். 89 ரன்கள் எடுத்திருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். இந்திய அணி 47.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்து வெற்றியைப் பதிவு செய்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் நம்பர் ஒன்னாக கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் :

Shobika

விரைவில் தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ்…

Admin

எமனாக வந்த மழை: முதல் டி20 போட்டி ரத்து

Admin