விளையாட்டு

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: சஞ்சு சாம்சன் நீக்கம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய அணி வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்
இந்திய அணி ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இதில் முதலாவது டி20 தொடர் ஜனவரி 24ம் தேதி தொடங்க உள்ளது. இந்த நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான டி20 போட்டிகளில் ஓய்வில் இருந்த ரோகித் சர்மா,முகமது சமி ஆகியோர் அணிக்கு திரும்புகிறார்கள்.

அதேசமயம் இலங்கை தொடரில் விளையாடிய சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-க்கு போட்டியாக கருதப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் விளையாடி 5 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: காலிறுதியில் சதிஷ் குமார்- இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம்?

20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), , ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரிஷாப் பண்ட், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், சாஹல், மனிஷ் பாண்டே, ஷிவம் துபே, ஜஸ்பிரித் பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது ஷமி, நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று 2வது ஒருநாள் போட்டி …தோல்விக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா?

Admin

மார்ச்சில் தொடங்குகிறது “ஐபிஎல் திருவிழா”

Admin

இன்று 2வது டி20 போட்டி… வெற்றி பயணத்தை தொடருமா இந்திய அணி

Admin